சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (டி.ஜி.சி.ஏ), சர்வதேச விமான இடைநீக்கத்தை ஜூலை 15 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. சர்வதேச விமானங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களில் கேஸ் டூ கேஸ் அடிப்படையில் அனுமதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், உள்நாட்டு வழித்தடங்களில் லாக்டவுனுக்கு முன் திட்டமிடப்பட்ட திறனில், 45 சதவீதம் வரை விமானங்களை இயக்க அனுமதித்துள்ளது. இது முன்பு 30-35 சதவீதமாக இருந்தது.
”இந்தியாவில் இருந்து புறப்படுவதற்கு மற்றும் இந்தியா வருவதற்கான சர்வதேசபயணிகள் விமானப் போக்குவரத்து ஜூலை 15-ம் தேதி இரவு 11.59 மணி வரை நிறுத்தி வைக்கப்படுகிறது. எனினும் தேவையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடத்தில் சிறப்பு விமானப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படும். ஜூலை 15 வரையிலானகட்டுப்பாடு, சர்வதேச பயணிகள் விமானங்களுக்கு மட்டுமே பொருந்தும். சர்வதேச சரக்கு விமானங்களுக்கு பொருந்தாது” என்று டி.ஜி.சி.ஏ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஒருபுறம், சர்வதேச நடவடிக்கைகளுக்கான கட்டுப்பாடுகளை சிறிது தளர்த்தி அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளுடன் பயண குமிழ்கள் அல்லது விமான பாலங்களை நிறுவுவதற்கு அரசாங்கத்தின் முன்மொழிவுக்கு இணங்க வெளிநாட்டு விமான நிறுவனங்கள் இந்தியாவுக்கு விமானங்களை மீண்டும் தொடங்க வழிவகுக்கும். மறுபுறம், உள்நாட்டு விமான நடவடிக்கைகளை மேற்கொள்வது மே 25 ஆம் தேதி விமானங்கள் பறக்க அனுமதி அளிக்கப்பட்ட பின், பறக்கத் தொடங்காத விமான நிலையங்களுக்கான விமானங்களை மீண்டும் தொடங்க உதவக்கூடும் என்று விமான நிர்வாகிகள் தெரிவித்தனர். மாநில அரசுகள் விதித்துள்ள கட்டுப்பாடுகள் காரணமாக இந்திய கேரியர்கள் ஒரு நாளைக்கு அங்கீகரிக்கப்பட்ட 65 சதவீதமாக, 1,200 விமானங்கள் மட்டுமே பறக்கின்றன.
உள்நாட்டு நடவடிக்கைகள் 50-55 சதவீத திறனில் செயல்பட்டவுடன் திட்டமிடப்பட்ட சர்வதேச விமான நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும் என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி முன்பு தெரிவித்திருந்தார். “நாட்டில் அளவீடு செய்யப்பட்ட உள்நாட்டு சிவில் விமானப் பணிகளை மீண்டும் தொடங்கிய ஒரு மாதத்தில், விமான நிலையங்கள் மும்முரமாக உள்ளன. நாடு முழுவதும் 21,316 விமானங்களில் இதுவரை 18,92,581 பயணிகள் பறந்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்” என்று பூரி வெள்ளிக்கிழமை கூறினார்.
மே மாதத்தில் உள்நாட்டு விமான நடவடிக்கைகளின் ஒரு வாரத்திற்கு டி.ஜி.சி.ஏ வெளியிட்ட தரவுகளின்படி, உள்நாட்டு விமான நிறுவனங்கள் கணிசமாக குறைந்த எண்ணிக்கையில் இயங்கின. இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ தனது லோடு ஃபேக்டரை வெறும் 52.6 சதவீதமாக பதிவு செய்துள்ளது. மூத்த விமான அதிகாரி ஒருவர் கூறுகையில், ”பெருநகரங்களிலிருந்து சிறிய நகரங்களுக்குச் செல்லும் விமானங்கள் முழுமையாக நிரம்பியிருக்கும் சில வழித்தடங்களில், திரும்பும் தடத்தில் கிட்டத்தட்ட காலியாக இருந்தன” என்றார்.