சனி, 27 ஜூன், 2020

எள் விதை, வெல்லப் பாகு, லெமன் ஜூஸ்...

மலச்சிக்கல் என்பது ஒரு பொதுவான பிரச்சனை இது மக்களை ஒவ்வொரு முறையும் தொந்தரவு செய்கிறது. குடல் இயக்கம் குறைவாகவும் கழிக்க கடினமாகவும் மாறும்போது இது நிகழ்கிறது. மக்கள் மலச்சிக்கலை லேசாக எடுத்துக் கொள்ளும் போது, அது தீவிர வலி / அல்லது மூல நோயை ஏற்படுத்துகிறது.


போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது, குறைவான அளவு நார்ச்சத்து உள்ள உணவுகளை சேர்த்துக் கொள்வது, போதுமான உடற்பயிற்சி இல்லமல் இருப்பது போன்ற காரணங்களால் மலச்சிக்கள் ஏற்படலாம்.

ஆனால் மலச்சிக்கலை போக்கி விரைவான நிவாரணத்தை பெற சில சமையலறை பொருட்கள் உள்ளன அவற்றை பற்றி பார்ப்போம்.

எள் விதைகள்

International Journal for Research in Applied Science and Engineering Technology என்ற ஆய்வு இதழில் வெளிய்டப்பட்டுள்ள ஒரு ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி எள் மலச்சிக்கலுக்கு சிறந்த தீர்வு தரக்கூடியது. ஏனெனில் அவற்றில் அடங்கியுள்ள எண்ணெய் கலவை குடலை ஈரப்பதமாக்கி மலம் எளிதாக கழிக்க உதவுகிறது.

வெல்ல பாகு (Molasses)

Journal of Ethnopharmacology ஆய்வு இதழ் மூலம் குழ்ந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கலுக்கு இந்த மூலப்பொருளை பயன்படுத்தி ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வு முடிவில் தினம்தோறும் படுக்கைக்கு செல்வதற்கு முன் இதை ஒரு தேக்கரண்டி குடித்து வந்தால் மலச்சிக்கல் ஏற்படாது என்று கண்டறியப்பட்டது.

நார்ச்சத்து (Fibre)

நார்ச்சத்து நிறைந்த உணவுகளான பீன்ஸ், பாதாம், காய்கறிகள், பழங்கள், உலர்பழங்கள், பயிறு வகைகள், ஓட்ஸ் மற்றும் பார்லி போன்றவைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

எலுமிச்சை ஜூஸ்

எலுமிச்சை சாற்றில் சிட்ரிக் அமிலம் உள்ளது. இது உடலில் இருந்து நச்சுக்களை அகற்ற உதவுகிறது. தினசரி காலை எலுமிச்சை சாறு அருந்தலாம். இந்த வழியில் நீங்கள் சிட்ரிக் அமிலத்தில் உள்ள நன்மைகளை மட்டும் பெறுவது இல்லை, உடலில் உள்ள நீர்ச்சத்தையும் தக்க வைத்துக் கொள்கிறீர்கள். இது மலச்சிக்கலை எதிர்த்துப் போராடுகிறது.

 

காபி

பெருங்குடலை தூண்டுவதன் மூலம், காபி நீங்கள் கழிவறைக்கு செல்வதை துரிதப்படுத்துகிறது. பிற சூடான பானங்களான மூலிகை தேயிலை மற்றும் ஒரு கப் வெதுவெதுப்பான தண்ணீர் ஆகியவையும் மலச்சிக்கலை விரட்டும்.

ஆமணக்கு எண்ணெய்

ஆமணக்கு எண்ணெய் சிறந்த மலமிளக்கியாக செயல்படுகிறது. எனவே வெறும் வயிற்றில் இரண்டு தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெயை குடிக்கலாம்.