ஞாயிறு, 4 அக்டோபர், 2020

இந்தியாவில் குறையத் தொடங்கும் தினசரி பாதிப்பு விகிதம்: காரணம் என்ன?

 கடந்த வெள்ளிக்கிழமை இந்தியாவின் புதிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 80,000 க்கும் குறைவாக இருந்தது. கடந்த ஒரு மாதத்தில் வெறும் நான்காவது முறையாக இத்தகைய போக்கு காணப்படுகிறது. ஆனால் முந்தைய மூன்று சந்தர்ப்பங்களில், ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட  தினசரி பரிசோதனைகளின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைந்ததால் திங்கட்கிழமை கொரோனா பாதிப்புகள் குறைந்து காணப்பட்டன.  ஆனால், வெள்ளிக்கிழமை முடிவுகள் முந்தைய நாளின் மேற்கொள்ளப்பட்ட குறைவான சோதனைகளின் விளைவகாக அமையவில்லை.

மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வருவதால், கடந்த சில நாட்களில் இந்தியாவின் தினசரி கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு எண்ணிக்கை வீழ்ச்சி அடையத் தொடங்கியது.

இரண்டு வாரங்களுக்கு முன்னர், 22,000-க இருந்த  மகாராஷ்டிராவின் தினசரி பாதிப்பு எண்ணிக்கை தற்போது 15,000-18,000 என்ற வரம்பில் காணப்படுகின்றன . தேசிய மட்டதிலும் இதன் தாக்கத்தை நாம் உணர்கிறோம். முக்கியமாக, செப்டம்பர் 2வது வாரத்தில் 98,000 என்ற தினசரி உயரத்தை தாண்டாமல் இந்தியாவின் கொரோனா பாதிப்பை தக்க வைத்தத்தில் மகாராஷ்டிராவின் போக்கு முக்கியமானது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை இந்தியாவின் பாதிப்புகளில் இரண்டாவது இடத்தில் இருந்த ஆந்திராவின் தற்போதைய வீழ்ச்சியும், இதற்கு காரணமாக இருக்கலாம். இருப்பினும், இந்தியாவின் பாதிப்புகளில் மகாராஷ்டிராவின் தாக்கம் புதிதல்ல. ஒரு கட்டத்தில், ஒரு கட்டத்தில், நாட்டின் 40 சதவீதம் மொத்த பாதிப்புகள் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து பதிவாகின. அந்த விழுக்காடு தற்போது 22 % க்கும்  குறைந்துவிட்டது. இருப்பினும், இந்தியாவின் ஒட்டுமொத்த பாதையை வழிநடத்தும் மாநிலமாக மகாராஷ்டிரா விளங்குகிறது

செப்டம்பர் மாதத்தில், மகாராஷ்டிராவின் தினசரி புதிய பாதிப்புகள் மிகவும் கூர்மையாக அதிகரித்தது. வெறும் 10 நாட்களுக்குள், 12,000  என்ற அளவில் இருந்த தினசரி பாதிப்பு எண்ணிக்கை 22,000  என்ற அளவில் சென்றன.  அதே நேரத்தில், கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்திலிருந்து 3  லட்சமாக உயர்ந்தன.  இருப்பினும், சில நாட்களிலேயே தினசரி பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறையத் தொடங்கின. அதன், விளைவாக தற்போது ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை 2.6 லட்சத்திற்கும் குறைவாக உள்ளன.

மகாராஷ்டிராவின் இந்த அடுத்தடுத்த உயர்வு மற்றும்  வீழ்ச்சி போக்குகள் நன்றாக புரிந்து கொள்ளப்படவில்லை . இருப்பினும், மாநிலத்தின் ஒட்டுமொத்த பாதையை வழிநடத்தும் நகரமாக புனே விளங்குகிறது. செப்டம்பரில்,  நாட்டிலேயே அதிக நோய்த் தொற்று கொண்ட நகரமாக புனே உருவெடுத்தது. அதன், தினசரி பாதிப்பு எண்ணிக்கை 6,000 என்ற அளவில் இருந்தன.

கொரோனா பெருந்தொற்றல் அதிக பாதிப்பைக் கண்ட  தமிழ்நாட்டின் தினசரி பாதிப்பு எண்ணிக்கை கூட இந்த அளவில் இல்லை.  தற்போது, அதிர்ஷ்டவசமாக, புனே நகரின் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3,000 க்குள் குறைவாக பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இருப்பினும், டெல்லி, புனே  தவிர, வேறு எந்த நகரத்திலும் இத்தகைய பாதிப்புகள் கண்டறியப்படவில்லை. (உதாரணமாக, சென்னையில் தற்போது கோவிட்-19 க்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 12,013 அளவில் தான் உள்ளது. அதன்,  மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,70,025 ஆக உள்ளது ) புனே, நகரின் மொத்த கொரோனா பாதிப்பு சனிக்கிழமையன்று மூன்று லட்சத்தைக் கடந்தது.

 

 

இதற்கிடையில், நாடு முழுவதும் கொவிட்-19 தொற்றில் இருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறையத் தொடங்கியுள்ளது. புதிய பாதிப்புகளை விட, தற்போது குறைவானவர்களே குணமடைந்து வருகின்றன.  புதிய பாதிப்புகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால், குணமடைவோர் எண்ணிக்கையும் குறையத் தொடங்கும். குணமடைந்தவர்களில் கடைசி 10 லட்சம் பேர் கடந்த 12 நாட்களில் குணமடைந்தவர்கள்.

இந்தியாவில் ஒட்டுமொத்த குணம் அடைந்தோரின் எண்ணிக்கை இன்றைக்கு 54 லட்சத்தைத் தாண்டி உள்ளது. 10 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 73.36 % அளவுக்கு குணம் அடைந்தோர் விகிதம் இருந்தது. இதில் மகாராஷ்டிரா மாநிலம் அதிக எண்ணிக்கையில் இருக்கிறது. அந்த மாநிலத்தைத் தொடர்ந்து ஆந்திர பிரதேசம், கர்நாடகா மாநிலங்கள் அதிக அளவு குணமடைந்தோரின் எண்ணிக்கையைக் கொண்டுள்ளன.

இதற்கிடையே, கொவிட் 19-க்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையை, 10 லட்சத்திற்கும் குறைவாக பராமரிக்கும் போக்கை, இந்தியா தக்க வைத்துக் கொண்டுள்ளது.

இந்தியாவில் இறப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது. அமெரிக்கா, பிரேசில் போன்ற நாடுகள்  மட்டுமே இந்தியாவை விட அதிகப்படியான    இறப்புகளைப் பதிவு செய்துள்ளன. அமெரிக்காவில்  2.12 லட்சத்துக்கும் அதிகமானோர், பிரேசிலில் சுமார் 1.45 லட்சம் பேர் இந்த நோயால் இறந்துள்ளனர். இந்தியாவின்,  40 சதவீதம் உயிரிழப்புகள் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து பதிவாகியுள்ளன.

உலகெங்கிலும் நிகழ்ந்த, கொரோனா தொடர்பான  உயிரிழப்புகளில் பத்து சதவீதம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். ஒவ்வொரு நாளும், உலகளவில் பதிவாகும்  கொரோனா இறப்புகளில் 15 – 25 சதவீத பங்கை இந்தியா கொண்டுள்ளது.

மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, குறைந்த அளவு உயிரிழப்பு விகிதம் கொண்ட நாடுகள் வரிசையில் இந்தியாவும் ஒரு நாடாக தொடர்ந்து நிலை கொண்டுள்ளது. உலக அளவில் உயிரிழப்போர் விகிதம் இன்றைய தேதிப்படி 2.97%- ஆக இருக்கிறது. இதனோடு ஒப்பிடும் போது இந்தியாவின் விகிதம் 1.56% ஆக இருக்கிறது.