சேலத்தில் சாலையோரத்தில் கொரோனா ரத்த மாதிரிகள் சிதறி கிடந்த விவகாரத்தில் இருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆத்தூர் அருகே கொத்தாம்பாடியில் நேற்று சாலையோரத்தில் கொரோனா பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகள் கீழே சிதறிக் கிடந்தன. இது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக விசாரணை நடத்திய அதிகாரிகள், பணியாளர்கள் இருவரை பணிநீக்கம் செய்துள்ளனர். பணியில் அலட்சியமாக இருந்ததாக, தற்காலிக பணியாளர்கள் செந்தில் மற்றும் சரவணன் ஆகியோரை பணிநீக்கம் செய்து சுகாதாரத்துறை துணை இயக்குநர் செல்வகுமார் உத்தரவிட்டுள்ளார்.