திங்கள், 4 ஜனவரி, 2021

2 கோவிட் தடுப்பூசிகளை அவசரக்கால பயன்பாட்டுக்கு ஒப்புதல் : அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

 கோவிட் – 19 பாதிப்பை தடுக்கும் கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டிற்கு மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் இன்று அனுமதி அளித்தது.

முன்னதாக, ஜனவரி 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் நடைபெற்ற மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பின் துறை ரீதியான நிபுணர் குழு கூட்டத்தில் ,  இந்திய சீரம் நிறுவனத்தின் தடுப்பு மருந்தை அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கவும், பொதுமக்களின் நலன் கருதி, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு, புதிய வகை தொற்றை கருத்தில் கொண்டு, பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பு மருந்தை சோதனை அடிப்படையில் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கவும் இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு தலைமையகத்துக்கு பரிந்துரைகள்  அளிக்கப்பட்டது. எனவே,  அடுத்து கட்ட நடவடிக்கைகள் குறித்து இங்கே காணலாம்.

தடுப்பூசிகளை அரசு கொள்முதல் செய்ய வேண்டும்:

முன்னணி தடுப்பூகளில் ஒன்றான AZD1222 ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஜென்னர் இன்ஸ்டிடியூட் உருவாக்கியதுடன், இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜை தலைமையிடமாகக் கொண்ட அஸ்ட்ராஜெனெகா பிரிட்டிஷ்-ஸ்வீடிஷ் பன்னாட்டு மருந்து மற்றும் உயிர் மருந்துத் தயாரிப்பு நிறுவனம் உரிமம் பெற்றது.  இந்தியாவில், சீரம் நிறுவனம் இதனை கோவிஷீல்ட் என்ற பெயரில் உற்பத்தி செய்யும் உரிமையை பெற்றது.

பூனாவில் உள்ள சீரம் ஆராய்ச்சி நிலையம் கோவிஷீல்ட் தடுப்பு மருந்தின் இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட மனிதப் பரிசோதனைகளை மேற்கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. நிறுவனம், ஏற்கனவே 80 மில்லியன் டோஸ் அளவுகளை கையிருப்பு வைத்திருப்பதால், பொது மக்கள் பயன்பாட்டிற்கு விரைவாக பயன்படுத்தலாம்.

புனேவைச் சேர்ந்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்  (ஐ.சி.எம்.ஆர்) நிறுவனம்  மற்றும் ஹைதராபாத்தை தளமாகக் கொண்டு இயங்கும் பாரத் பயோடெக் நிறுவனம் இனைந்து தயாரித்த கோவாக்சின் (COVAXIN) தடுப்பு மருந்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு வர சில நாட்கள் அல்லது வாரங்கள் ஆகலாம்.

மருந்து நிர்வகிக்கும் செயல்முறை : 

ஃபைசர்-பயோஎன்டெக், மாடர்னா  ஆகிய  தடுப்பு மருந்துகளுக்கு அவசரகால பயன்பாட்டிற்கு ஒப்புதல் வழங்கிய ஒரு சில நாட்களிலேயே அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் பொது மக்கள் பயன்பாட்டிற்கு தடுப்பு மருந்து  வந்தது. இந்தியாவிலும்,  செயல்முறைகள் அனைத்தும் வேகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. உறுதியான காலக்கெடு எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், இன்னும் ஒரு வாரத்திற்குள் தடுப்பூசி நிர்வகிக்கும் திட்டம் நாடு முழுவதும் தொடங்கப்படலம் என்று எதிர்பார்க்கலாம்.

நாடு முழுவதும் கோவிட்-19-க்கான தடுப்பூசி போடும் திட்டத்திற்காக 83 கோடி சிரஞ்சிகளை கொள்முதல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் 35 கோடிக்கும் அதிகமான சிரஞ்சிகளை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் மேலும் தெரிவித்தது.

முன்கள ஊழியர்கள்:   

கோவிட்-19 தடுப்பூசி சுகாதார பணியாளர்கள், முன்கள ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் உட்பட 30 கோடி பேருக்கு வழங்க மத்திய அரசு முன்னுரிமை வழங்கியுள்ளது.

“முதல் கட்ட தடுப்பூசி நிர்வகிக்கும் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள 1 கோடி சுகாதார  பணியாளர்கள் மற்றும் 2 கோடி முன்கள ஊழியர்களுக்கு கட்டணமின்றி இலவசமாக வழங்கப்படும். வரும் ஜூலை மாதத்துக்குள்  50 வயதுக்கு மேற்பட்டவா்கள் உள்ளிட்ட 27 கோடி முன்னிரிமை நபா்களுக்கு எவ்வாறு தடுப்பூசி நிர்வகிப்பது குறித்த நடைமுறைகள் இறுதி செய்யப்பட்டு வருகின்றன” என்று டாக்டர் ஹர்ஷ் வர்தன் கடந்த ஜனவரி 2 ம் தேதி ட்வீட் செய்திருந்தார்.

மற்றவர்களுக்கு எப்போது?

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் முதற்கட்ட தடுப்பூசி திட்டத்தை நிறைவேற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.   மீதமுள்ள மக்களுக்கு தடுப்பூசி நிர்வகிப்பது தொடர்பான  எந்த காலக்கெடும் இன்னும் அறியப்படவில்லை. இருப்பினும், முதல் கட்டம் நிறைவடையும் வரை மீதமுள்ள மக்கள் காத்திருக்க வேண்டியிருக்கும்.

பொதுமக்களின் அவசரகால பயன்பாட்டிற்கு தடுப்பூசி  அணுகலை கிடைப்பது உறுதி செய்வது முக்கியமானதாக  இருக்கும். சீரம் நிறுவனம் தனது உற்பத்தியை அதிகரிப்பதாகக் கூறியுள்ளது. மேலும், கோவிஷீல்ட், கோவாக்சின் தவிர, வரும் காலங்களில் இதர சில தடுப்பூசிகளையும் அவசரகாலப் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படலாம். இவற்றில் ஃபைசர், மாடர்னா, ஸ்பூட்னிக்-வி, ஜைகோவ்-டி (ZyCov-D) தடுப்பூசிகள் முன்னிலையில் உள்ளன.

தடுப்பு மருந்துகளை முறைப்படி வழங்குவதற்கு முன்பாக நாடெங்கிலும் அனைத்து மாநிலங்களிலும் 125 மாவட்டங்களிலுள்ள 285 மையங்களில் இதுகுறித்த ஒத்திகையை சுகாதார அமைச்சகம் இன்று நடத்தியது. கோவிட்-19 தடுப்பு மருந்து விரைவில் வழங்கப்பட உள்ள நிலையில், அந்த பணிகள் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் இந்த ஒத்திகை நடைபெற்றது.

முன்னதாக, கொவிட் தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்ட பின் அதனை தேசிய அளவில் முறையாக வழங்கும் நோக்கத்தில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகங்கள் இணைந்து பிரம்மாண்ட கோவின் (CoWIN) என்ற புதிய டிஜிட்டல் தளத்தை உருவாக்கின.

தடுப்பு மருந்துகளின் கையிருப்பு, அவற்றை சேமிக்கும் வெப்பநிலை, பயனாளிகளை கண்காணிக்கும் முறை போன்றவற்றை கோ- வின் (Co WIN) மின்னணு தளத்தின் மூலமாக அறிந்து கொள்ளலாம். இதுவரை 75 இலட்சத்திற்கும் அதிகமான பயனாளிகள் இந்தத் தளத்தில் விண்ணப்பித்துள்ளனர்.

தடுப்பு மருந்து அளிக்கும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த மத்திய, மாநில அரசுகளின் அதிகாரிகள், தொழில்நுணுக்க நிபுணர்களைக் கொண்ட தேசிய நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தேசிய, பிராந்திய அளவிலான தேவைகளுக்கு ஏற்ப இந்தக் குழு முடிவுகளை எடுக்கும்.

கோவிட் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களும், தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டுமா? 

ஆம். கொரோனா நோய்த் தொற்றில் இருந்து முழுமையான பாதுகாப்பை பெற தடுப்பு மருந்து தேவையானது என முன்னதாக பொது மக்களுக்கு அறிவுரை வழங்கியது.

source: https://tamil.indianexpress.com/explained/covid-19-vaccine-approval-of-serum-institute-of-india-and-bharat-biotech-240560/