ஞாயிறு, 10 ஜனவரி, 2021

தமிழக ஆளுனர் மாற்றமா? முன்னாள் மத்திய அமைச்சருக்கு குவியும் வாழ்த்துகள்

 தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகரும், முன்னாள் மத்திய அமைச்சருமான யு.வி.கிருஷ்ணம் ராஜு தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்படுவார் என்றும், இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல்கள் பரவி வருகிறது.

கடந்த 2017-ம் ஆண்டு தமிழகத்தின் ஆளுநராக பொறுப்பேற்றவர் பன்வாரிலால் புரோஹித். தற்போது இவர் மாற்றப்பட்டு புதிய ஆளுநராக யு.வி.கிருஷ்ணம் ராஜு நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகரான இவர், பாகுபலி படத்தின் மூலம் உலகளவில் புகழ்பெற்ற பிராபாஸின் உறவினராவார்.

கடந்த 1992 ம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் ஆந்திராவின் நரசபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த கிருஷ்ணம் ராஜு, 1998, பாரதீய ஜனதா கட்சி சார்பில் காக்கினாடாவல் போட்டியிட்டு வெற்றிபெற்று மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து 1998-99 காலகட்டத்தில் தகவல், ஒளிபரப்பு, வணிக மற்றும் தொழில்துறை அமைச்சகங்களின் ஆலோசனைக் குழுக்களில் இருந்தார்.

குறுகிய காலத்தில், மத்திய வெளியுறவு அமைச்சராக, இருந்த அவர் பாதுகாப்பு அமைச்சகம், மத்திய வெளியுறவு அமைச்சர், நுகர்வோர் விவகார அமைச்சகம், உணவு மற்றும் பொது விநியோகம் என பல துறைகளில் பணியாற்றியுள்ளார். இதனையடுத்து கடந்த 2009 ம் ஆண்டு, பாஜகவில் இருந்து விலகி சிரஞ்சீவியின் பிரஜராஜ்யம் கட்சி சேர்ந்த அவர், அன்பிறகு அக்கட்சியை விட்டு விலகினார்.

தொடர்ந்து சில ஆண்டுகள்  அரசியலில் இருந்து விலகிய கிருஷ்ணம் ராஜு தற்போது மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளார். இதனையடுத்து தற்போது இவர் தமிழகத்தின் ஆளுநராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி வைரலாக பரவி வரும் நிலையில், கிருஷ்ணம் ராஜுவின் ரசிகர்கள் மட்டுமல்ல, நடிகர் பிரபாஸின் ரசிகர்களும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். மேலும் இதற்காக அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர்.

https://tamil.indianexpress.com/india/tamil-nadu-governor-will-change-241565/