சனி, 23 ஜனவரி, 2021

விவசாயிகள் போராட்டத்தில் முக்கிய திருப்பம்: மத்திய அரசு பரிந்துரை குறித்து முதல்முறையாக பரிசீலனை

 மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்ட குழுவுக்கும் மத்திய அரசின் பேச்சு வார்த்தை குழுவுக்கும் இடையே பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடந்து, தோல்வியில் முடிந்தன.  இந்நிலையில் நேற்று (புதன் கிழமை) நடந்த பேச்சு வார்த்தைக் கூட்டத்தில் சில முன்னேற்றங்கள் காணப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அதோடு புதிய வேளாண் சட்டத்தை இயற்றுவது பற்றி 18 மாதங்களுக்கு பின்னர் யோசிக்கப்படும் என மத்திய அரசின் பேச்சு வார்த்தைக் குழு தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.

நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்ற ஜம்ஹூரி கிசான் சபாவின் பொதுச் செயலாளர் குல்வந்த் சிங் இது பற்றி கூறியதாவது:
“மத்திய அரசின் குழுவோடு நடந்த பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் உள்ளது . மத்திய தொழில்துறை அமைச்சர் சோம் பிரகாஷ் இரண்டு வருடங்களுக்கு புதிய வேளாண் சட்டம்  நிறைவேற்றப்  படாது  என்று கூறினார். ஆனால் மற்ற இரண்டு அமைச்சர்களும் ( பியூஸ் கோயல், நரேந்திர சிங் தோமர்) 1.5 வருடங்கள் வரை  எந்த புதிய வேளாண் சட்டமும்  நிறைவேற்றப்  படாது  என்று கூறினர். மற்றும் இது தொடர்பான பிரமாண பத்திரத்தை  உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இது குறித்து பஞ்சாப்பைச் சேர்ந்த  32 விவசாய சங்கங்களுடன் ஆலோசனை நடத்த உள்ளோம். அதன் பின்பு ஜனவரி 22 ஆம் தேதி எங்கள் முடிவை அறிவிப்போம். அதோடு  குடியரசு தின விழா அன்று நடத்தப்படவுள்ள டிராக்டர் அணிவகுப்பு குறித்த எங்கள் முடிவுவில் எந்த மாற்றமும் இல்லை” என்று கூறினார்.

 

 

பேச்சு வார்த்தையில் கலந்து கொண்ட மஹிலா கிசான் ஆதிகர் மஞ்சின் தலைவர் கவிதா குருகந்தியிடம் இது பற்றி கேட்டபோது: “இந்த புதிய வேளாண் சட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும் எனக் கூறினோம். மத்திய அரசின் குழு சட்டத்தை இயற்றுவதில் தற்காலிக விலக்கு அளிப்பதாக கூறினார்கள். இது பற்றி விவசாய சங்கங்களுடன் விவாதித்த பிறகு எங்கள் முடிவை தெரிக்க உள்ளோம். இரு தரப்பினருக்கும் பரஸ்பரம் ஏற்பட்டால், உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரத்தை சமர்ப்பிக்க உள்ளதாக மத்திய அரசின் குழு கூறியுள்ளது. மற்றும் நிலுவையில் உள்ள எங்கள் கோரிக்கைகளை ஆராய ஒரு குழுவை உருவாக்க போவதாகவும் கூறியுள்ளது” என்று கூறினார்.

அகில இந்திய கிசான் கூட்டமைப்பின் தலைவர், ஹரியானா பிரேம் சிங் கெஹ்லவத்திடம் இது பற்றி கேட்டபோது, “புதிய வேளாண் சட்டத்திற்கு தாற்காலி விலக்கு அழிப்பது பற்றி, அனைத்து விவசாய சங்கங்களுக்கும் வரும் வியாழக்கிழமை அன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அதன் பின்னரே மத்திய அரசின் குழுவிடம் எங்கள் முடிவை தெரிவிக்க உள்ளோம்” என்று கூறினார்.

இது குறித்து பி.கே.யு -வின் (ராஜேவால்) தலைவர், பல்பீர் சிங் ராஜேவாலிடம் கேட்டபோது, “வேளாண் சட்டத்தை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடனே மத்திய அரசுக் குழுவை சந்தித்தோம். ஆனால் அவர்கள் புதிய திட்டங்களை முன்மொழிந்து உள்ளனர். எனவே அதைப் பற்றி விவசாய சங்கங்களுடன்  விவாதிக்க உள்ளோம். அதோடு ஜனவரி 22 அன்று எங்களுடைய உறுதியான முடிவை அறிவிப்போம்” என்று கூறியுள்ளார்.

 

 

இதைப்பற்றி பி.கே.யுவின்  (உக்ரஹான்) தலைவர், ஜோகிந்தர் சிங் உக்ரஹானிடம் கேட்டபோது, ” புதன்கிழமை நடந்த பேச்சு வார்த்தையில் முடிவு ஏதும் எட்டாது என்று நினைத்தோம். ஆனால் மதிய இடைவேளைக்கு பின் நடந்த பேச்சுவார்த்தையில் சில மாற்றங்கள் தெரிந்தது. மத்திய அரசு முன்மொழிந்துள்ளது புதிய திட்டங்கள் பற்றி விவாதிக்க உள்ளோம். விவசாயிகளுக்கு எதிராக என்ஐஏ அனுப்பி இருந்த நோட்டீஸ்களை மத்திய அரசுக் குழு திரும்ப பெறுவதாக கூறுயுள்ளது” என்று கூறினார்

இது பற்றி பி.கே.யுவின் ராகேஷ் டிக்கைட் கூறிய போது,” வேளாண் சட்டங்களுக்கு  1.5 வருடங்கள் முதல் 2 வருடங்களுக்கு தாற்காலி விலக்கு அளிப்பதாகவும், அதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பிக்க உள்ளதாகவும் மத்திய அரசுக் குழு எங்களிடம் கூறியது. வரும் வெள்ளிக்கிழமை அன்று எங்கள் முடிவை அறிவிக்க உள்ளோம். எங்களின்  நிலைப்பாடு மிகத் தெளிவானது, புதிய வேளாண் சட்டத்தை நீக்க வேண்டும். அதோடு எம்.எஸ்.பி தொடர்பாக புதிய  சட்டம் உருவாக்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

source https://tamil.indianexpress.com/india/delhi-protest-new-turnings-centres-offer-to-keep-the-laws-in-abeyance-for-18-months-243506/