திங்கள், 25 ஜனவரி, 2021

டெல்லி போராட்டக் களத்தை நோக்கி நகரும் பெண்கள் தலையில் ரொட்டி நிறைந்த பைகள்

 

source https://tamil.indianexpress.com/india/rotis-bag-on-women-head-delhi-farmers-protest-update-tamil-news-244021/

Women in Delhi protest Tamil News : சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை எதிர்த்துக் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஆசாத் மைதானத்தில் கூடியிருந்த நூற்றுக்கணக்கான விவசாயிகளில் ஏராளமான பெண்களும் இருந்தனர். ஆர்ப்பாட்டங்களின் காலத்திற்கு அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் போதுமான அளவு உணவு வகைகள் நிறைந்த பைகளைத் தலையில் வைத்து எடுத்துச் சென்றனர். நாசிக், பெத் நகரைச் சேர்ந்த தை தவுலு ராம் என்பவர், பெட்ஷீட்களையும், பிளாஸ்டிக் பைகளில் போர்த்தப்பட்ட சப்பாத்திகளையும், கணவனுக்கும் தனக்கும் ஒரு துணியில் அடைத்துக் கொண்டு, மூன்று நாட்கள் வரை வைத்திருந்தார்.

“ 2018-ம் ஆண்டு நான் கடைசியாக மும்பைக்கு வந்தேன். அப்போது விவசாயிகள் ஒரு பேரணியை மேற்கொண்டனர். ஆனால், இப்போது நாங்கள் முன்பை விட ஏழ்மையானவர்கள். இந்த வேளாண் சட்டங்கள் இயற்றப்படக்கூடாது” என்று அழுத்தத்துடன் அவர் பகிர்ந்துகொண்டார். அந்தப் பெண்மணி எங்கே உறங்குவார் என்று கேட்டதற்கு, “இதோ புல் மீது” என்றுகூறிப் புன்னகைக்கிறார். போராட்டத்தில் பங்கேற்பதற்காக தவுலு தன்னுடைய குழந்தைகளை பெத்தில் விட்டு வந்திருக்கிறார்.

“இதுபோன்ற போராட்டங்களில் பெண்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதற்கான காரணம், ஆலோசகர்களின் நனவான முயற்சிகள்தான். எல்லாவற்றிற்கும் மேலாக, விவசாய பொருளாதாரத்தில் பெண்கள் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளனர். மேலும், இந்தத் துறையில் எந்தவொரு தாக்கமும் அவர்களையும் மிகவும் பாதிக்கும். இங்கு ஏராளமான பெண்கள் இருப்பது அவர்களின் எதிர்காலம் ஆபத்தில் இருப்பதாக அவர்கள் உணருவதால்தான்” என்று ஆர்வலர் பிரசாத் சுப்பிரமணியம் கூறினார்.

நந்தூர்பாரில் இருந்து, விவசாயிகளுடன் 140 வாகனங்கள் ஞாயிற்றுக்கிழமை மும்பைக்கு வந்தன. எதிர்ப்பு அணிவகுப்பில் பங்கேற்க தங்கள் குடும்பங்களை விட்டு வெளியேறிய பெண்கள்தான் இந்த வாகனங்கள் முழுவதும் நிறைந்திருந்தனர். நீதா வால்வி (50) தன்னுடைய விவசாய நிலத்தில் அரிசி மற்றும் துவரம் பருப்பை வளர்க்கிறார். “நாங்கள் மூன்று சட்டங்களைப் பற்றிக் கேள்விப்பட்டோம். நான் கேட்டது எதுவாக இருந்தாலும் அது எங்களுக்குப் பயனளிக்கும் என்று நான் நம்பவில்லை” என்று அவர் கூறினார். மூன்று நாள் போராட்டத்தில் சேர கிராமவாசிகள் திட்டமிட்டபோது, அவர் தானாக முன் வந்தார். அவருடைய பக்கத்து வீட்டு மணிலா கவிட் தன்னுடைய பெட்ஷீட்டை போர்த்தி எப்படி வால்வியுடன் சேர்ந்தார். மும்பைக்கு முதல் பயணத்தைத் தொடங்க இருவரும் தங்கள் குடும்பங்களை விட்டு வெளியேறினர்.

ஞாயிற்றுக்கிழமை, அவர்கள் தூங்குவதற்குச் சாப்பிடுவதற்கும் ஆசாத் மைதானத்தில் ஒரு இடத்தை தேடிக் கொண்டிருந்தனர். “நாங்கள் தனியாக வரப் பயப்படவில்லை. எங்களுடைய கிராமவாசிகள் எங்களைச் சுற்றி உள்ளனர்” என்று வால்வி கூறினார். விவசாயிகள் தங்கள் படுக்கை விரிப்புகளைப் புல் மீது விரித்து கால்களைக் குறுக்கி அமர்ந்தனர்.

“நாங்கள் வீட்டில் உட்கார்ந்து என்ன செய்வோம். இது வெளியே வர வேண்டிய நேரம்” என நந்தூர்பரைச் சேர்ந்த சாந்தி பத்வி என்பவர் கூறினார். அவர் நவாபூரில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் குழுவுடன் பயணம் செய்து கொண்டிருந்தார். அவருடைய கணவர் வீட்டிலேயே தங்கள் பண்ணையை நிர்வகித்து வந்தார்.

திரிம்பகேஸ்வரிலிருந்து, ஹிராபாய் டும்னே (40) தன்னுடைய குடும்பத்தினருடன் சனிக்கிழமை மும்பை புறப்பட்டார். பெண்கள் வலிமையானவர்கள் என்றும், இரவில் காற்றில் லேசான குளிர்ச்சியைத் தாங்க முடியும் என்றும் எதிர்ப்பு அணிவகுப்பில் நீண்ட தூரம் நடக்கலாம் என்றும் அவர் கூறுகிறார். இதில் இருக்கும் ஒரே பிரச்சனை என்னவென்றால், பெரும் கூட்டத்திற்குக் கழிப்பறைகளைக் கண்டுபிடிப்பதுதான்.