இமாச்சலப் பிரதேசத்தில் காட்டு வாத்துகளிடமும் ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் காகங்களிடமும் கேரளாவில் வாத்துகளிடமும் பறவைக் காய்ச்சல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹரியானாவில், கடந்த சில நாட்களில் சுமார் 1 லட்சம் கோழிகள் மர்மமான முறையில் இறந்துள்ளன.
இமாச்சலப் பிரதேசத்தின் பாங் அணை ஏரியில், சுமார் 1,800 புலம்பெயர்ந்த பறவைகள் இறந்து கிடந்துள்ளது. கேரளாவில், இரண்டு மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. அதனால், வாத்துகளைக் கொல்ல உத்தரவிடுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். ராஜஸ்தானில் பறவைக் காய்ச்சல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு அரை டஜன் மாவட்டங்களில் 250 க்கும் மேற்பட்ட காகங்கள் இறந்து கிடந்தது.
பறவைக் காய்ச்சல் என்றால் என்ன?
இது இன்ஃப்ளூயன்ஸா என்கிற ‘ஏ’ வகை வைரஸால் ஏற்படும் மிகவும் தீவிரமான வைரஸ் தொற்று நோயாகும். இது பொதுவாக கோழிகள் மற்றும் வான்கோழிகள் போன்ற கோழிகளை பாதிக்கிறது. வைரஸின் பல வகைகள் உள்ளன – அவற்றில் சில லேசானவை மற்றும் கோழிகளிடையே குறைந்த முட்டை உற்பத்தி அல்லது பிற லேசான அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடும். மற்றவைகள் கடும் ஆபத்தானவை ஆகும்.
பறவைக் காய்ச்சல் எவ்வாறு பரவுகிறது?
காட்டு வாத்துகள், வாத்துகள் போன்ற காட்டு நீர் பறவைகள் இன்ஃபுளூயன்ஸா ஏ வைரஸ்கள் நீத்தேக்கங்களில் காணப்படுகிறது. இந்த வைரஸ்கள் சுற்றுச்சூழலில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
பல பறவைகள் நோய்வாய்ப்படாமல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அதை எச்சங்களில் சிந்துகின்றன. பறவைகள் பறக்கும் போதும் நீத்துளிகளில் வைரஸை வெளிப்படுத்துகிறது. அமெரிக்க வைராலஜி பேராசிரியர் வின்சென்ட் ராகனெல்லோவின் வார்த்தைகளில், “இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் நீர்த் துளிகளை உலகம் முழுவதும் கொட்டுகின்றன” என்று தெரிவித்துள்ளது.
நீர் பறவைகள் பல இடம்பெயர்ந்து நீண்ட தூரம் பயணிக்கின்றன. இதனால், இந்த வைரஸ்கள் கோழி மற்றும் நிலத்தில் வசிக்கும் பறவைகள் மீதும் பரவுகின்றன. சில நேரங்களில், இந்த வைரஸ் பன்றிகள், குதிரைகள், பூனைகள் மற்றும் நாய்கள் போன்ற பாலூட்டிகளுக்கும் பரவுகிறது.
பறவைக் காய்ச்சல் எப்போது எப்படி மனிதர்களுக்கு தொற்றத் தொடங்கியது?
பறவைக் காய்ச்சல் பரவல் பல தசாப்தங்களாக உலகெங்கிலும் கோழிகளைப் பாதித்து வருகின்றன. மேலும், பாதிக்கப்பட்ட பறவைகளைக் கொல்வது காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்த ஒரு பொதுவான நடவடிக்கையாகும். ஆனால், 1997ம் ஆண்டில் ஹாங்காங்கின் பறவை சந்தையில் காய்ச்சல் பரவியதைத் தொடர்ந்து பறவைகளிடம் இருந்து மனிதர்கள் பறவைக் காய்ச்சல் பாதிப்புக்குள்ளானதாக முதலில் கண்டறியப்பட்டது. இது வைரஸ் எச்5என்1 என்ற வைரஸின் உருமாறிய வைரஸ் ஆகும். இந்த வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட 18 பேரில் 6 பேர் இறந்தனர்.
இந்த வைரஸ் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் சில ஆண்டுகளுக்குப் பிறகு உலகின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் தோன்றியது. நூற்றுக்கணக்கான மனிதர்களுக்கு மரணங்களை ஏற்படுத்தியது. குறிப்பாக தென்கிழக்கு ஆசியாவில் மனிதர்களுக்கு மரணங்களை ஏற்படுத்தியது. வைரஸ் பாதிக்கப்பட்ட கோழிகள், பறவைகளின் இடபெயர்வு, சட்டவிரோத பறவை வர்த்தகம் ஆகியவை இந்த வைரஸ் பரவுவதற்கு காரணங்கள் என்று நம்பப்படுகிறது. பூனைகள், சிங்கங்கள் போன்ற சில பாலூட்டிகளும் இதனால் பாதிக்கப்பட்டன.
பின்னர், எச்5என்2 மற்றும் எச்5என்8 போன்ற வைரஸின் உருமாறிய வைரஸ்கள் விலங்குகளிடமிருந்து மனிதர்களிடம் தாண்டியது. இதனால் இந்த வைரஸ் உலக அளவில் பொது சுகாதார கவலையாக மாறியது.
இது மனிதர்களிடையே எளிதில் பரவுமா?
இது மனிதர்களிடையே எளிதில் பரவாது. பொதுவாக, பாதிக்கப்பட்ட உயிருடன் அல்லது இறந்த பறவைகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் எச்5என்1 பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இது பொதுவாக உலக சுகாதர நிறுவனத்தின் கருத்துப்படி, ஒரு நபரிடம் இருந்து மற்றொரு நபருக்கு பரவாது. இந்த நோய் முறையாக தயாரிக்கப்பட்ட மற்றும் சமைத்த கோழி இறைச்சி உணவு மூலம் மக்களுக்கு பரவும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. வைரஸ் வெப்பத்தை உணரும் திறண் கொண்டது. மேலும் இந்த வைரஸ் சமைக்கும்போது அந்த வெப்பத்தில் இறக்கிறது.
பயம் ஏன்?
H5N1 வைரஸ் கடும் ஆபத்தானது – மனிதர்களில் வைரஸ் உறுதிப்படுத்தப்பட்ட 10 பேர்களில் 6 பேரின் இறப்புக்கு வழிவகுத்தது (அறிகுறி இல்லாத நோயாளிகளின் குறைவான அறிக்கையின் காரணமாக உண்மையான இறப்பு விகிதம் குறைவாக இருக்கலாம்).
இந்த வைரஸ் உருமாறி ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு எளிதில் பரவக்கூடியதாக மாறினால், மனித உயிரணுக்களை மனிதர்களின் உயிரணுக்களைத் தாக்கி அதன் வடிவத்தை மாற்றுவதன் மூலம் அது ஒரு தொற்றுநோயை ஏற்படுத்தக்கூடும்.
மேலும், காய்ச்சல் வைரஸ்கள் ஒரு பிரிக்கப்பட்ட மரபணுவைக் கொண்டிருப்பதால் உருமாறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. காய்ச்சலின் அனைத்து உருமாறிய காய்ச்சல்களும் பருவகால காய்ச்சல் மற்றும் தொற்று காய்ச்சல் உட்பட – பறவைகளிலிருந்து மனிதர்களிடம் இந்த வழியில் தொற்றியுள்ளது.
இந்தியாவில் பறவைக் காய்ச்சல்
இந்தியாவில் மனிதர்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இதுவரை கண்டறியப்படவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2006 முதல் 15 மாநிலங்களில் (மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் முதல் பரவல் ஏற்பட்டபோது) 2015 வரை கோழிகளில் எச்5என்1 பறவைக் காய்ச்சல் 25 முறை ஏற்பட்டுள்ளதாக கால்நடை வளர்ப்புத் துறை தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் காய்ச்சல் காகங்களிலும் கண்டறியப்பட்டுள்ளது.
பறவைக் காய்ச்சல்: அதன் அறிகுறிகளும் சிகிச்சையும்
பறவைகளில் போல இல்லாமல் இந்த வைரஸ் பொதுவாக குடலைத் தொற்றுகிறது. பறவை காய்ச்சல் மனிதர்களின் சுவாசக் குழாயைத் தாக்குகிறது. நிமோனியா அல்லது கடுமையான சுவாசக் கோளாறு நோய்க்குறி (ARDS) போன்ற கடுமையான சுவாச நோய்களை ஏற்படுத்தக்கூடும். காய்ச்சல், இருமல், தொண்டை புண் மற்றும் சில நேரங்களில் வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை இதன் ஆரம்ப அறிகுறிகளாகும்.
வைரஸ் தடுப்பு மருந்துகள், குறிப்பாக ஒசெல்டமிவிர் (oseltamivir), மனிதர்களில் உயிர்வாழ்வதற்கான வாய்ப்புகளை மேம்படுத்துகின்றன என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கோழிகள் இடையே பணிபுரிபவர்கள் கைகளைக் கழுவுதல், முகக்கவசம் அணிதல் பாதுகாப்பு உடைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. அமெரிக்காவில், எஃப்.டி.ஏ 2007-இல் எச்5என்1 வைரஸிற்கான தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்தது.
கோழிகள் மத்தியில், காய்ச்சலைத் தடுக்க உலக விலங்குகள் அமைப்பு பரிந்துரைக்கும் தடுப்பூசி உத்திகளைப் பயன்படுத்தலாம். மேலும், பறவை இனங்கள் மற்றும் மனித நோய்த்தொற்றுகளில் நோயைக் கட்டுப்படுத்த அந்த இடங்களில் உயர் நோய்க்கிருமி ஏவியன் இன்ஃப்ளூயன்ஸாவை (HPAI) அழிக்க உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது.
source: https://tamil.indianexpress.com/explained/what-is-bird-flu-how-severe-is-the-latest-outbreak-in-india-241187/