தமிழகத்தில் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்ட அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏ.ஐ.எம்.ஐ.எம்) கட்சியை யாரும் பெரிதாக கவனிக்கவில்லை. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, வருகிற சட்டமன்றத் தேர்தலில் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி தமிழகத்தில் அதிக இடங்களில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருப்பதால் தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.
ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி பிகார் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அக்கட்சி தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதல் தமிழக முஸ்லிம் கட்சிகள் எச்சரிக்கை உள்ளன. ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி தமிழகத்தில் 2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வாணியம்பாடி தொகுதியில் போட்டியிட்டு 10,000 வாக்குகளுக்கு மேல் பெற்றது. ஓவைசி கட்சியின் தீவிரமான தோற்றம், கடும் பிரச்சாரத் தாக்குதல் தீவிர நிலைப்பாடு ஆகியவற்றால், தமிழகத்தில் முஸ்லிம் கட்சிகளுகளில் உள்ள ஒரு பிரிவு ஆதரவுத் தளம் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சிக்கு சென்றுவிடும் என்று கருதுகின்றன.
தமிழக தேர்தலில் கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளின்போது ஒவைசி அதிக இடங்களைப் பெற்றுக்கொண்டு அமைதியாக செல்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரியவில்லை.
ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி திமுக கூட்டணியில் இணைந்தால், ஏற்கனவே அதன் கூட்டணியில் இருக்கும் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, முந்தைய தேர்தல்களை விட குறைந்த இடங்களைப் பெற வேண்டியிருக்கும்.
இதுகுறித்து திமுகவின் கூட்டணி கட்சியான மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கூறுகையில், “நாங்கள் என்ன சொல்கிறோம் என்றால், இங்கே வெளியிலிருந்து ஒரு கட்சி தேவையில்லை. தமிழகத்தில் உள்ள முஸ்லிம்கள், நாட்டில் மற்ற சில பகுதிகளைப் போல இல்லாமல், சமூக பொருளாதார மற்றும் அரசியல் வளர்ச்சியையும், சட்டசபை, அமைச்சரவையிலும், நாடாளுமன்றத்திலும் சிறந்த பிரதிநிதித்துவத்தை பெற்றுள்ளனர். தமிழகம் சமூக நல்லிணக்கத்தை கொண்டாடுகிறது” என்று கூறினார்.
திமுக சிறுபான்மை அணி நடத்து மாநாட்டுக்கு ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் ஓவைசிக்கு அழைப்பு விடுத்தது. பின்னர், இதற்கு திமுக கூட்டணியில் உள்ள தமிழக முஸ்லிம் கட்சிகள் அதிருப்தி தெரிவித்ததால், திமுக தரப்பில் ஓவைசியை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். அவர் மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி இரு முணைகளைக் கொண்ட கத்தி, அக்கட்சி தனியாக போட்டியிட்டால் முஸ்லிம் வாக்காளர்களைப் பிளவுபடுத்தக்கூடும் என்று திமுக தரப்பில் நம்புவதாகக் கூறப்படுகிறது.
அதே நேரத்தில், திமுக அக்கட்சியுடன் கூட்டணி அமைத்தால், ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் கடுமையான நிலைப்பாடு காரணமாக, திமுகவை எதிர்ப்பவர்கள் ‘இந்து எதிர்ப்பு’ கட்சி என்ற குற்றச்சாட்டுகளை முன்னிலைப்படுத்தக்கூடும் என்றும் கருதப்படுகிறது.
திமுக கடந்த காலத்தில் 50% முஸ்லிம்களின் ஆதரவை பெற்றிருந்தது. இப்போது எங்களிடம் 100% முஸ்லிம்களின் ஆதரவு உள்ளது. ஆகவே, ஏ.ஐ.எம்.ஐ.எம் தனியாக போட்டியிட்டாலும், அவர்களால் 10% க்கும் மேல் சிறுபான்மை வாக்குகளைப் பெற முடியாது. அதே நேரத்தில், ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியை திமுக கூட்டணியில் சேர்த்துக்கொண்டால், எதிர்க் கட்சிகள்இன் இந்து எதிர்ப்பு கட்சி என்ற அச்சுறுத்தலை தடுக்க முடியாது” ” என்று ஒரு திமுக தலைவர் கூறினார்.