E Voter Card Download Tamil News: தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் டிஜிட்டல் முறையில் வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை போன்ற அடையாள அட்டைகள் டிஜிட்டல் முறையில் வழங்கப்பட்டு வருவதால், வாக்களர் அடையாள அட்டையையும் டிஜிட்டல் முறையில் வழங்க திட்டமிட்டுள்ளது. அதோடு ஜனவரி 25-ம் தேதி தேசிய வாக்காளர் தினம் என்பதால், அன்று முதல் இந்த திட்டத்தை அமல் படுத்தவும் முடிவு செய்துள்ளது.
இதற்காக இணைய பக்கம் ஒன்றையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது. ஏற்கனவே வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பவர்களும், இப்போது புதிய வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தவர்களும் இந்த இணைய பக்கத்தின் மூலம் வாக்காளர் அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஜனவரி 25 முதல் 31 வரை புதிய வாக்களர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தவர்களும், பிப்ரவரி 1 முதல் ஏற்கனவே வாக்களர் அடையாள அட்டை வைத்திருப்பவர்களும் தேர்தல் ஆணையத்தின் இணைய பக்கத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம். அலைபேசி எண்களை வாக்களர் அடையாள அட்டையுடன் இணைக்காதவர்கள் இந்த இணையத்தின் மூலம் மீண்டும் புதுப்பித்துக் கொள்ளலாம். இணையத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யப்படும் வாக்களர் அட்டைகள் பிடிஎப் வடிவங்களில் (PDF) கிடைக்கும். அதோடு பதிவிறக்கம் செய்யப்படும் வாக்களர் அடையாள அட்டைகளில் பாதுகாப்பான க்யு ஆர் குறியீடு (QR code) வழங்கப்பட்டுள்ளதால், இதை டூப்ளிகேட் செய்ய இயலாது.
வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்ய முதலில் இந்த இணைய பக்கங்களுக்கு செல்ல வேண்டும். (https://voterportal.eci.gov.
source https://tamil.indianexpress.com/india/e-voter-card-download-tamil-news-how-to-download-digital-voter-cards-election-commission-of-india-244064/