வியாழன், 14 ஜனவரி, 2021

ஆந்திராவில் தான் இழந்த இடத்தை மீண்டும் பிடிக்க போராடும் தெலுங்கு தேசம் கட்சி, பாஜகவுக்கு எதிராக புதிய யுக்தியை கையிலெடுத்துள்ளது.

 ஆந்திராவில், கடந்த சட்டமன்ற தேர்தலில், பலத்த அடி வாங்கிய சந்திரபாபு சாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி, பாஜகவுக்கு எதிராக ஆந்திராவில் புதிய அரசியல் பாதையை வகுத்துள்ளது. இந்த புதிய அரசியல் பாதையில் இந்துத்துவாவை கையிலெடுத்துள்ள தெலுங்கு தேசம் கட்சி, மாநிலத்தில் உள்ள கோயில்களை அழித்தல் சிலைகளை சேதப்படுத்தும் காழ்ப்புணர்ச்சி ஆகியவற்றிற்கு மத்தியில், தனது முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது.

இந்நிலையில் ஆந்திராவில், உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டுள்ள பாஜவின் முடிவுக்கு சந்திரபாபு நாயுடுவின் இந்த நடவடிக்கைதான் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. ஆனால் தெலுங்கு தேசம் கட்சியின் இந்த முயற்சியை முறியடிக்கும் வகையில், பாஜக சார்பில் ஆந்திராவில், ராமதீர்த்தத்திலிருந்து ரத யாத்திரை அறிவிக்கப்பட்டுள்ளது. தனது நிலையை உயர்ந்திக்கொள்ள பாஜகவின் தந்திரங்களை பயன்படுத்தும், சந்திரபாபு நாயுடு, தனது அரசியலை மாற்றிக் கொண்டிருக்கிறார்.  இந்த மாற்றம் அரசியல் ரீதியாக பொருத்தமானதாகவும், பாஜகவைத் தவிர்ப்பதற்காகவும், பெரிய அளவில் இந்துத்துவா நிலைபாட்டை ஏற்றுக்கொண்டுள்ளது.

மேலும் ஒய் எஸ் ஜெகன் மோகன் ரெட்டியின் கிறிஸ்தவ நம்பிக்கையை நினைவு கூர்வது முதல் இந்துத்துவாவை பின்பற்றுவதுவரை, சந்திரபா நாயுடு தனது சொந்த முயற்சியில், பாஜகவை வீழ்த்த முயல்கிறார். ஆனால்  தெலுங்கு தேசம் கட்சியின் இந்த நிலைபாட்டால், பாஜக பின்வாங்காது என அக்கட்சின் மூத்த உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர். மேலும் விஜயநகரத்தில் உள்ள ராமதீர்த்தத்தில் இருந்து திருப்பதிக்கு அருகிலுள்ள கபிலதீர்த்தத்திற்கு ரத யாத்திரை நடைபெறும் எனவும், விஜயநகரத்தில் உள்ள ராமதீர்த்தத்தில் 400 ஆண்டுகள் பழமையான ராமர் சிலை பாழ்படுத்தப்பட்டுள்ளது இதற்கு சந்திரபாபு நாயுடு அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை  என பாஜக கடுமையாக விமர்சித்தது.

மேலும் “ஒருவர் இத்தகைய மத சகிப்பின்மையைக் காட்டக்கூடாது என்றும், ஜெய் ஸ்ரீ ராம் என்ற முழக்கம் தற்போது அயோத்தியில் ஒலிக்கிறது ஆனால், ஆந்திராவில் உயர்ந்த இடத்தில் உள்ள ராமதீர்த்தத்தில் புகழ்பெற்ற கோயிலில், ராம சிலையை தலை துண்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் குற்றவாளிகளைப் பிடிக்க அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, எனவும் தெரிவித்துள்ளனர். 2014 ஆம் ஆண்டில், தெலுங்கு தேசம் கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தபோது, ​​ஆந்திராவில் நான்கு சட்டமன்றங்களையும், இரண்டு மக்களவை இடங்களையும் பாஜக வென்றது. ஆனால் 2019 ல் ஒய்.எஸ்.ஆர்.சி.பி ​​வெற்றி பெற்றபோது, பாஜக ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. மேலும் கடந்த அதன் வாக்கு வங்கியும், 0.84 சதவீதமாகக் குறைந்தது.

பாஜகவின் செயலில் உள்ள இந்துத்துவ அரசியல் சந்திரபாபு நாயுடுவை எச்சரித்துள்ளது. ஆனால் ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சியை வீழ்த்தி ஒய்.எஸ்.ஆர்.சி.பி.க்கு முக்கிய போட்டியாளராக பாஜக இருக்கும் என அக்கட்சியின் தலைவர்கள் வெளிப்படையாகக் கூறி வருகின்றனர். கடந்த சில நாட்களில் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகன் நாரா லோகேஷ் தெலுங்கு தேசம் கட்சியின் மதச்சார்பற்ற அரசியலை உறுதிப்படுத்திய நிலையில், “முதல்வர் ஒய் எஸ் ஜெகன் மோகன் ரெட்டி இந்துக்களைக் காட்டிக் கொடுத்தவர்,’ ’என்று குற்றம் சாட்டினார். மேலும் ஜெகன் ரெட்டி ஒரு கிறிஸ்தவராக இருக்கலாம். ஆனால் இந்துக்களை மதம் மாற்றுவதற்கு அதிகாரத்தைப் பயன்படுத்த நினைப்பது தவறு. அதிகாரத்தில் உள்ளவர்கள் மத மாற்றங்களை நாடினால், அது துரோகம் ஆகும், எனவும் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், கண்ணா லட்சுமிநாராயணனை மாநில பாஜக தலைவராக மாற்றிய சோமு வீராஜு, ஒய்.எஸ்.ஆர்.சி.பிக்கு முக்கிய போட்டியாளராக மாற கட்சி செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். ஆனால்  அரசியலில் ஒரு வெற்றிடம் இருப்பதால் நிலைமை எங்களுக்கு சாதகாக அமையும். இதனால் அடுத்த தேர்தலில் நாங்கள் முக்கிய போட்டியாளராக இருப்போம் என ஆந்திர மாநில தெலுங்கு தேசம் கட்சி தலைவர் கே.அச்சன்னாய்டு தெரிவித்துள்ளார்.

source: https://tamil.indianexpress.com/india/chandrababu-naidu-with-new-tactic-to-bring-down-bjp-242394/