வியாழன், 28 ஜனவரி, 2021

கேள்விக்குறியான பேச்சுவார்த்தை… பின்வாங்கும் விவசாய சங்கத் தலைவர்கள்

Liz Mathew , Harikishan Sharma

கடந்த இரண்டு மாதங்களாக சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் ஏதும் ஏற்படாத வகையில் விவசாய தொழிற்சங்கங்கள் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தினர். நக்சல்கள் முதல் காலிஸ்தானியர் என்று பல்வேறு விதமாக விமர்சித்த அனைவருக்கும் இது அமைதியான போராட்டம்தான் என்று பதிலடி கொடுத்தனர். ஆனால் தேசிய தலைநகர் டெல்லியில் குடியரசு தின நிகழ்வுகள் போது செங்கோட்டையை நோக்கி ஒரு பிரிவினர் ஊர்வலம் சென்றனர். அவர்களின் நடவடிக்கை இந்த போராட்டத்தில் விவசாயிகள் மட்டுமில்லை பல்வேறு தீய சக்திகள் இடம் பெற்றுள்ளன என்பதை அரசு முன்வைக்க ஒரு வாய்ப்பினை கொடுத்துள்ளது.

வரவிருக்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது இதுகுறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மூன்று சட்டங்களையும் நிறுத்தி வைப்பதற்கான உத்தரவையும் விவசாய துறையினர் நிராகரித்தனர். செவ்வாய்க் கிழமை வன்முறையைத் தொடர்ந்து இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது. அரசு இந்த சமயத்தில் வேளாண் தொழிற்சங்கங்கள் மற்றும் பஞ்சாப்பின் ஆளும் காங்கிரஸ், செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்ற சம்பவங்களில் இருந்து விலகி கண்ணனும் செய்வதையும் பயன்படுத்திக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எங்களின் யுக்தி முன்னோக்கி செல்வது நிச்சயம் என்று அரசுத் தரப்பில் இருக்கும் ஒருவர் கூறியுள்ளார். நீங்கள் செங்கோட்டைக்கு கூட்டமாக சென்று அங்கே ஒரு கொடியை நாட்டி இந்த சட்டங்களை பற்றிப் பேசலாம் என்று ஒருபோதும் கூற முடியாது என அவர் தெரிவித்தார்.

விவசாய சங்கத் தலைவர்கள் எங்களுடன் பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டாலும், இவர்கள் (போராட்டக்காரர்கள்) அதனை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லாத போது தலைவர்கள் என்ன செய்வார்கள். செவ்வாய்கிழமை அன்று நடைபெற்ற சம்பவம் அவர்களின் விரிட் கூட செல்லுபடியாகாது என்பதையே காட்டுகின்றன என அவர் தெரிவித்தார்.

டெல்லியில் குழப்பமான சூழ்நிலை உருவான நிலையில் எதிர்ப்பாளர்கள் தடுப்புகளை மீறி காவல்துறையினரை தாக்கி மத கொடியை செங்கோட்டையில் ஏற்றுவதற்காக நுழைந்தனர். மத்திய அமைச்சர்கள் இதுவரை அமைதி காத்து வருகின்றனர். என்ன நடந்தது அது எவ்வாறு நடைபெற்றது என்பதற்கான மதிப்பீட்டு அறிக்கை நிலுவையில் இருக்கின்ற காரணத்தால் எங்களால் ஏதும் கூற முடியாது என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

ட்ராக்டர் அணிவகுப்பு விவசாய சங்களின் வெளியேற்றத்திற்கு ஒரு முக்கியப்புள்ளியாக அமைந்துவிட்டது. அவர்கள் நாங்கள் பேச்சுவார்த்தையில் சமரசத்தை எட்டவில்லை என்று கூற வேண்டிய நிலை உருவாகும் என்றும் மேற்கோள்காட்டினார்.

இந்த விவகாரத்தில் அரசு மிகவும் நெகிழ்வு தன்மையுடனே நடந்து கொண்டது. மேலும் பல்வேறு சமரசங்களை செய்து கொண்டது. ஆனால் தற்போது நிலைமை வேறாக உள்ளது. இந்த கட்டுக்கடங்காத போராட்டக்காரர்கள் பேச்சுவார்த்தையை நிறுத்த அச்சுறுத்துகின்றன. இந்த வாய்ப்பை பயன்படுத்தி தலைவர்கள் ஒரு தீர்மானத்தை எடுப்பார்கள் என்று மற்றொரு அரசு வட்டாரம் கூறுகிறது.

Question mark over farm talks, protest leaders on backfoot

கண்ணீர் புகைகுண்டு வீசுவதை தவிர, இந்த போராட்டத்தில் டெல்லி காவல்துறையினர் ஆற்றிய பதிலடியும் அளவிடப்பட்டது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.  இந்த போராட்டம் எதிர்க்கட்சியினரால் நடத்தப்படுகிறது என்றும் பஞ்சாப் அளவிற்கு மட்டுப்படுத்தப்பட்டது என்றும் கூறி போராட்டத்தை குறைமதிப்பீடு செய்ய முற்பட்டது பாஜக. போராட்டக்காரர்கள் மீது இது போன்ற குற்றச்சாட்டுகளை வைக்க கூடாது என்று கூறியும் பல தலைவர்கள் அவர்களை மாவோயிஸ்ட்கள் மற்றும் காலிஸ்தானியர்கள் என்று கூறினர்.  இருப்பினும், கட்சியின் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய இப்போது ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில், பாஜக தலைவர் ஜே பி நட்டா கட்சி தலைமையகத்தில் மூத்த தலைவர்களுடன் கலந்துரையாடினார்.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

பாஜக மூத்த தலைவர் முரளிதர ராவ் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய போது, அரசால் சீர்திருத்தங்கள் என்று வழங்கப்பட்ட சட்டங்களை எதிர்த்து போராடுகிறார்கள் என்று நினைத்தோம். ஆனால் இந்தியாவின் குடியரசிற்கு எதிரானது என்று நடந்த நிகழ்வுகள் மூலம் அறிந்தோம். இன்று தேசிய தலைநகரில் என்ன நடைபெற்றதோ அது நம்பிக்கை மற்றும் சுதந்திர மீறலாகும் என்றார்.

Question mark over farm talks, protest leaders on backfoot

ஜனநாயகத்தில், அரசை எதிர்த்து நீங்கள் ஊர்வலம் நடத்தலாம். நீங்கள் அரசையும் அமைச்சர்களையும் அவமானப்படுத்துவதாக அது தோன்றும். ஆனால் இந்தியா குடியரசின் இறையாண்மையை நீங்கள் எதிர்க்க கூடாது. இது தான் இன்று நடைபெற்றது. இதை நாங்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்று ராவ் தெரிவித்தார்.

பாஜக பொது செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், இயக்கம் என்ற பெயரில் இன்று டெல்லியில் என்ன நடந்தது? இந்நாட்டின் விவசாயிகள் இதை செய்ய முடியுமா?

பாஜக தலைவர் ராம் மாதவ், எதிர்கட்சியினரை இந்த நிகழ்விற்காக குற்றம் சாட்டினார். புதிய சட்டங்களுக்கு எதிராக பொய்யான தகவல்கள் அனைத்தையும் கூறி விவசாயிகளை தூண்டிய பின்னர், ட்ரெம்பின் இந்திய முகமாக இருக்கும் ராகுல் போன்றவர்கள் தற்போது போலியான கோபத்தை வெளிப்படுத்துகின்றனர். இன்று டெல்லியில் நடந்த சம்பவத்திற்கு அவர்களும் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

கட்சியின் செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா, செங்கோட்டையில் கொடியேற்றும் காட்சிகளை பதிவிட்டு சோகம் என்று குறிப்பிட்டிருந்தார். மற்றொரு ட்வீட்டில் இந்தியில், இத்தனை நாட்களாக நமக்கு உணவினை வழங்கிய விவசாயிகளை நாம் அன்னதத்தா என்று வழங்கினோம். ஆனால் அவர்கள் உக்ரவாதி என்று இன்று நிரூபித்துவிட்டனர். விவசாயிகளை இழிவுபடுத்த வேண்டாம். உக்ரவாதிகளை உக்ரவாதி (Extremists) என்றே அழையுங்கள் என்றார்.

ஆனாலும் இரண்டு மூத்த தலைவர்கள், விவசாயிகளை அப்படி விரோதிகளை காண முடியாது என்பதால் அவர்களை மிகுந்த எச்சரிக்கையுடன் அணுக வேண்டும். இல்லை என்றால் எடுக்கப்படும் எந்த ஒரு முடிவும், நாட்டின் பிற பகுதிகளில் அமைந்திருக்கும் விவசாய சமூகத்தினருக்கு போராட்டத்தை நடத்த ஒரு தூண்டுதலை ஏற்படுத்தும் என்றார்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இதுவரை 11 கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளது. மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமையில் அமையப்பெற்ற அமைச்சர்கள் குழு 41 விவசாயி சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தினர்.

டிசம்பர் 22ம் தேதிக்கு பிறகு சில சக்திகள் இந்த போராட்டத்தை தொடர விரும்புகின்றன என்று தோமர் கூறினார். அரசு பிரச்சனைகளை தீர்க்க தயாராக உள்ள போது, முடிவுகள் மேற்கொள்ள இயலவில்லை என்றால் , இந்த போராட்டத்தை நடத்த விரும்பும் சில சக்திகள் அங்கே உள்ளன என்பதையே நாங்கள் யூகிக்கின்றோம் என்று அவர் கூறினார்.

திங்கள் கிழமை அன்று குடியரசு தலைவர் பேசிய உரையில், சீர்திருத்த திட்டங்களின் ஆரம்பம் வேண்டுமானால் தவறான புரிதல்களை கொண்டிருக்கலாம். ஆனால் அரசு விவசாயிகளின் நலனிற்காக தனித்துவமாக உருவாக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

source  https://tamil.indianexpress.com/india/question-mark-over-farm-talks-protest-leaders-on-backfoot-244364/