செவ்வாய், 26 ஜனவரி, 2021

ஆர்எஸ்எஸ் காரர்களை நிக்கர்வாலாக்கள் என வடநாட்டில் கூறுவதுண்டு.

 தமிழகத்தின் எதிர்காலத்தை தமிழ் மக்களால் மட்டுமே தீர்மானிக்க முடியும். நாக்பூரைச் சேர்ந்த நிக்கர்வாலாக்கள் ஒருபோதும் தீர்மானிக்க முடியாது என்று ராகுல் காந்தி தேர்தல் பரப்புரையில் தெரிவித்தார்.

ஆனால், ராகுல் காந்தியின் பரப்புரையை தமிழில் மொழிபெயர்த்த  பீட்டர் அல்போன்ஸ், நாக்பூரைச் சேர்ந்த சாராய வியாபாரிகள் என்று தவறுதலாக தெரிவித்துவிட்டார்.

நிக்கர்வாலா என்பது ஆர்எஸ்எஸ் அமைப்பின் முந்தைய  அரைக்கால் டவுசர் சீருடையை குறிக்கும் உள்ளூர் வார்த்தையாகம்.

‘ராகுலின் தமிழ் வணக்கம்’ என்ற பெயரில் மூன்று நாள் தமிழகத்தில் மூன்று நாள் தேர்தல் பரப்புரையை ராகுல் காந்தி மேற்கொண்டார்.

 

நேற்றைய இரண்டாம் நாள் பிரச்சாரத்தின் போது பேசிய ராகுல் காந்தி, “இந்தியாவின் அடிப்படை கட்டமைப்புகளை சீரழிக்கு நரேந்திர மோடியை அனுமதிக்க மாட்டோம். தமிழக அரசை கட்டுபடுத்துவதன் மூலம் தமிழக மக்களை கட்டுபடுத்திவிடலாம் என்று மோடி நினைக்கிறார். தமிழக மக்கள் தான் தமிழகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியும் என்பதை பிரதமர் புரிந்து கொள்ள மறுக்கிறார். நாக்பூர் நிக்கர்வாலாக்கள் எந்த காலத்திலும், எப்போதும் இந்த மாநிலத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியாது” என்று தெரிவித்தர்

ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் காக்கி டிரவுசர், வெள்ளை சட்டை, கருப்பு தொப்பி, கருப்பு ஷூ அணிவது வழக்கம் .  காக்கி அரைக்கால் டிரவுசர் அணிவதால் ஆர்எஸ்எஸ் காரர்களை நிக்கர்வாலாக்கள் என வடநாட்டில் கூறுவதுண்டு.


source https://tamil.indianexpress.com/india/knickerwallahs-from-nagpur-can-never-ever-decide-future-of-tamil-nadu-says-rahul-gandhi/