ஞாயிறு, 24 ஜனவரி, 2021

யாராலும் தமிழக மக்களை விலைக்கு வாங்க முடியாது: ராகுல் காந்தி தேர்தல் பரப்புரை

 தமிழக மக்களுடன் என் உறவு அரசியல் ஆதாயம் கொண்டது அல்ல! என் மனதிலிருந்து தோன்றும் ரத்தப்பிணைப்புடன் இணைந்த ஓர் உணர்வு என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

 

2021ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரமாக  ‘ராகுலின் தமிழ் வணக்கம்’ என்ற பெயரில் மூன்று நாள் பயணமாக இன்று தமிழகம் வந்தார் ராகுல் காந்தி. விமான நிலையத்தில் ராகுல் காந்திக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோயம்புத்தூர் மாவட்டம் கல்லூப்பட்டியில் உள்ள சுகுணா ஆடிட்டோரியத்தில் சிறு, குறு  தொழில்முனைவோருடன்  கலந்துரையாடினார். கூட்டத்தில் பேசிய அவர், “நல்லிணக்கம் என்பது பொருளாதாரத்தின் முதன்மைத் தேவை ஆகும்! நல்லிணக்கம் இல்லாமல் சமுதாயத்தில் வளர்ச்சி இல்லை. நாட்டின் சிறு மற்றும் குறு தொழில்களின் வளர்ச்சியில்லாமல், நாம் நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல முடியாது எனத் தெரிவித்தார்.

 

 

 

 


மேலும், மக்களோடு உரையாடி தீர்வு நல்கும் அரசாக ஆட்சி அமைய வேண்டும். ஜி.எஸ்.டி பேரழிவே ஆளும் அரசின் திறனற்ற நிர்வாகத்திற்கு துல்லியமான எடுத்துக்காட்டு. ஐந்து அடுக்கு சிக்கல்களை கொண்டது தற்போதைய ஜிஎஸ்டி. காங்கிரஸ் இதனை எளிமைப்படுத்தி , வரிக்குறைப்பு செய்யும் மாற்றத்தினைக் கொண்டு வரும் எனவும் தெரிவித்தார்.

பின்பு தொடர் பிரச்சராம் செய்த  அவர்” தமிழக அரசாங்கத்தை கட்டுக்குள் வைத்து தமிழக மக்களை ஆளலாம் என்று பிரதமர் நினைக்கின்றார்!
யாராலும் தமிழக மக்களை விலைக்கு வாங்க முடியாது.  நமது நாட்டிலிருந்து வறுமையை முற்றிலும் ஒழிக்க வேண்டும், வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மக்களின் வங்கிக்கணக்கிற்கே அவர்களின் பணம் சென்று சேர வேண்டும் என்பதே காங்கிரஸின் நோக்கம் ‘என்று தெரிவித்தார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/2021-tn-assembly-election-rahul-gandhi-first-day-election-campaign-in-coimbatore-243844/