செவ்வாய், 12 ஜனவரி, 2021

அடுத்தடுத்து விபத்துக்கள் : விமான தளத்திற்கு இந்தோனேசியா மோசமான இடமா?

 இந்தோனேசியாவின் ஜகார்த்தா விமான நிலையத்திலிருந்து போண்டியானாக் பகுதிக்கு கடந்த சனிக்கிழமை புறப்பட்ட ஸ்ரீவிஜயா 182 ரக விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில், விபத்துக்குள்ளான சம்பவம் இந்தோனேசியாவின்  மோசமான விமானப் பாதுகாப்புக்கு மற்றொரு சான்றாக அமைந்துள்ளது.

மோசமான பராமரிப்பு, பைலட் பயிற்சி, தகவல் தொடர்பு அல்லது இயந்திர தோல்விகள் ( mechanical failures) மற்றும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு சிக்கல்கள் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மோசமாக இருந்ததால், கடந்த காலங்களில் நாடு பல விபத்து சம்பவங்களை சந்தித்துள்ளது. அந்த வகையில் இதுவரை 104 விபத்துக்கள் மற்றும் 2,353 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம் விமானத்தை எடுத்துச் செல்ல முடியாத ஆசியாவின் மிக மோசமான இடமாக, இந்தோனேசிய உள்ளதாக  விமானப் பாதுகாப்பு குறித்த ஆய்வு கூறுகிறது.

அந்த வகையில் கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 09)  எஸ்.ஜே .182  விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கடலுக்குள் விழுந்தது. இந்த விபத்துக்கு காரணம் என்னவென்று இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இந்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்படும்வரை இந்த விபத்து குறித்து மர்மம் நீடிக்கும் நிலையில், கனமழை காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்ட பிறகே விபத்து நடந்ததற்கான காரணம் தெரியவரும்.

எல்லா காலத்திலும் மிக வெற்றிகரமான விமானங்களில் ஒன்றான 737 ஜெட் விமானங்கள் முதன்முதலில் 1967 இல் பறக்கத் தொடங்கியது. இதில் தற்போது சர்ச்சைக்குரிய ஸ்ரீவிஜயா ஏர் ஜெட் 737-500 போயிங்கின் கிளாசிக் விமானத்தின் ஒரு பகுதியாகும். இதில் 737 மேக்ஸ் விமானம், 2017 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் அக்டோபர் 2018 இல் லயன் ஏர் விமானம் 610 மற்றும் மார்ச் 2019 இல் எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் 302 ஆகிய விமானங்கள் அபாயகரமான விபத்துக்களில் சிக்கியது.

மேலும் இந்தோனேசியாவில் உண்டாகும் எரிமலை வெடிப்புகளால், உண்டாகும் துகள்கள், ஜெட் விமானத்தின் என்ஜின்களில் உறிஞ்சப்படுவதால், அதிக விபத்துக்கள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  2019 ஆம் ஆண்டில், அலி மவுண்ட் வெடித்ததைத் தொடர்ந்து பாலியின் விமான நிலையம் ரத்துசெய்யப்பட்டு அங்கிருந்து ஏராளமான விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டது. புவி வெப்பமடைதலுடன், தீவிர வானிலை நிகழ்வுகளும் மிகவும் பொதுவானதாகி வருகின்றன.

இந்த  சீரற்ற நிலைமை காரணமாக ஸ்ரீவிஜய 182 ரக விமானம் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக கிளம்பியது. இது குறித்து சுயாதீன விமானப் ஆய்வாளர் ஜெர்ரி சோஜாத்மன் கூறுகையில், இந்த துயர ‘’சம்பவத்தின் உண்மையான காரணத்தை அறிய விசாரணையின் இறுதி அறிக்கைக்காக நாங்கள் காத்திருக்க வேண்டியிருக்கிறது. ​​இந்த விபத்துக்கு மோசமான வானிலை காரணமாக கூறப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

சம்பவ அறிக்கைகள்:

இந்தோனேசியாவில் ஏற்படும் விபத்துக்களுக்கு தகவல்தொடர்பு தோல்விகளும் ஒரு காரணிகளாக உள்ளது. மேலும் கடந்த ஆண்டின் கொரோனா வைரஸ் தொற்றுநோய் உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில்,  இதன் தாக்கம் விமான பயணங்களிலும் பெரும் தாக்குதலை ஏற்படுத்தி வருகிறது. 2014 டிசம்பரில் சூரபயாவிலிருந்து புறப்பட்ட ஏர் ஏசியா பி.டி. விமானத்தில், இந்தோனேசிய விமானி மற்றும் பிரெஞ்சு இணை விமானி ஆகியோர் விமானத்தில் ஏற்பட்ட தவறை சரி சரிசெய்ய முயற்சித்த நேரத்தில், விமானம் கட்டுப்பாடுகளை இழந்து கடலில் விழுந்தது.

நாட்டின் பல விமான நிலையங்களைப் போலவே, ஜகார்த்தாவின் சோகர்னோ-ஹட்டாவும் விமான பயணத்தில் ஆசியாவின் ஏற்றத்தை சமாளிக்க போராடுகிறது. வடிவமைக்கப்பட்ட வருடாந்திர திறன் சுமார் 60 மில்லியன் பயணிகளுக்கு சேவை செய்ய விரிவாக்கப்பட்டுள்ளது. ஆனாலும், 2019 ஆம் ஆண்டில், கொரோனா தாக்கத்திற்கு முன்பு, சுமார் 80 மில்லியனாக இருந்தது. மேலும் நெரிசல் மற்றும் அடிக்கடி விமான தாமதங்களை குறைக்க உதவும் வகையில் கடந்த ஜனவரியில் மூன்றாவது ஓடுபாதை திறக்கப்பட்டது.

கடந்த 2003-ம் ஆண்டு நிறுவப்பட்ட ஸ்ரீவிஜயா ஏர், தற்போது 53 வழித்தடங்களில் செல்கிறது.  இதில் பெரும்பாலான விமானகங்கள், மலேசியா, தில்லி, திமோர் லெஸ்டே உள்ளிட்ட சில சர்வதேச நாடுகளுக்கு செல்கிறது. இதற்கு முன் எந்தவிதமான ஆபத்துகளும் ஏற்படாத நிலையில், ஜெட் விமானங்கள் சம்பந்தப்பட்ட மேலும் நான்கு சம்பவங்கள் நடந்துள்ளன. கடைசியாக மே 2017 இல் ஒரு போயிங் 737-33 ஏ ஓடுபாதையில் இருந்து விலகி விபத்துக்குள்ளாது.

இதற்கு முன் கடந்த  2012 இல், மற்றொரு போயிங் ஜெட் விமானம் 182 விமானம் சென்ற மேற்கு காளிமந்தனின் பொண்டியானாக்கில் தரையிறங்கும் போது, கியர் சேதம் காரணமாக ஓடுபாதையில் இருந்து வெளியேறி விபத்துக்குள்ளானது.  அந்த நேரத்தில் பலத்த மழை பெய்து பெய்ததும் விபத்துக்கு முக்கிய காரணமாக அமைந்தது. மேலும் 2012 இல் நிறுவப்பட்ட டிரான்ஸ்நூசா ஏவியேஷன், 1999 -ல் நிறுவப்பட்ட லயன் ஏர், ஆகிய விமானங்கள் அபாயகரமான சம்பவங்களை சந்தித்துள்ளன.

போயிங்கின் 737-500 ஜெட் விமானம் எட்டு ஹல்-லாஸ் விபத்துக்களில் ஈடுபட்டுள்ளது. இவை அனைத்தும் விமான சேதத்தை சரிசெய்ய முடியாத சம்பவங்கள். இந்த விபத்துக்களில் மொத்தம் 220 உயிர்பலிகளும் நடந்துள்ளது.  இதில் செப்டம்பர் 2008 இல், ஏரோஃப்ளோட் பி.ஜே.எஸ்.சி 737-500 விமானம் விபத்துக்குள்ளானதில் 88 பேர் பலியாகினர். தொடர்ந்து ஜூலை 1993 -ல் ஆசியானா ஏர்லைன்ஸ் இன்க் விபத்தில் 68 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்துக்களுக்கு செயல்திறன், பயிற்சி அல்லது வானிலை தான் காரணம் என  புலனாய்வாளர்கள் தெரிவித்தனர். ஆனால் ஸ்ரீவிஜயா விமானம் 182 -ல் விபத்துக்குள்ளானதில், இதுவரை யாரும் உயிருடன் இருப்பதாக தெரியவில்லை.  737-500 இன் விபத்து இந்தோனேசியாவில், மூன்றாவது மிக மோசமான பேரழிவைக் குறிப்பதாக உள்ளது.

https://tamil.indianexpress.com/explained/consecutive-accidents-indonesia-worst-place-for-flight-taking-241949/