வியாழன், 7 ஜனவரி, 2021

கொரோனா தடுப்பு மருந்து ஹலால் பொருளா? பதிலுக்காக காத்திருக்கும் இந்தோனேசிய மக்கள்

 கடந்த  ஜூலை மாதம் சீன தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான சினோவாக்  இந்தோனேசியா அரசுக்கு எழுதிய கடிதத்தில் “கொரோனா தடுப்பு மருந்தில் பன்றி இறைச்சிப் பொருட்கள் இல்லை”என்று கடிதம் எழுதியது.

சீனா நிறுவனத்தின் கடிதம் உறுதியளிக்கும் அதே வேளையில், இந்தோனேசிய மதகுருக்களுக்கு கூடுதல் விவரங்கள் தேவைப்பட்டன.

உலகின் மிகப் பெரிய முஸ்லீம் மக்கள்தொகை கொண்ட நாடான இந்தோனேசியாவில், கொரோனா தடுப்பூசியில் பன்றியின் டி.என்.ஏ பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற நிருபிக்கப்படாத தகவலால் சில இஸ்லாமிய குழுக்கள் தடுப்பு மருந்தை புறக்கணிக்கப்போவதாக தெரிவித்து வந்தனர். இந்நிலையில்,மதக்குருமார்களின் சந்தேகங்களை போக்கும் வகையில் சினோவாக் நிறுவனம் தனது தயாரிப்பு குறித்த கூடுதல் தகவல்கள் பல நாள் காத்திருப்புக்குப் பிறகு தற்போது வெளியிட்டது.

தென்கிழக்கு ஆசியா நாடுகளில் கொரோனா நோய் தொற்றில் அதிகப் பாதிப்பைக் கண்ட நாடு இந்தோனேசிய. இதனையடுத்து, அடுத்த 15 மாதங்களுக்குள் 181.5 மில்லியன் வயதானவர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்தில் முன்னுரிமை அளிக்க அந்நாடு ஆர்வம் காட்டி வருகிறது. இருப்பினும், தடுப்பூசி  பாதுகாப்பானதா?  சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட  ஹலால் பொருளா?  இஸ்லாத் வழிமுறைக்கு ஏற்புடையதா? போன்ற கேள்விகள் அரசின்  முயற்சிகளை மேலும்  சிக்கலாக்குகின்றன.

“இந்த தடுப்பு மருந்தைப் பொறுத்தவரை,சரியத் சட்டப்படி அனுமதிக்கப்பட்ட  ஹலால் பொருளா? இலல்லையா? என்பதில் கவனம் செலுத்த தேவையில்லை ” என்று அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோ கூறினார். கோவிட்-19 நோய்த் தொற்று  அவசரகால சூழ்நிலையில் இருக்கிறோம் என்றும் தெரிவித்தார்.

இந்தோனேசியாவில், 800,000க்கும் அதிகமானோருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. 23,000 க்கும் அதிகமான இறப்புகள் பதிவாகியுள்ளன. தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் இந்த எண்ணிக்கை ஒப்பிட்டளவில் மிகவும் அதிகமாகும். சினோவாக் தடுப்பு மருந்து பாதுகாப்பானது என்று சுகாதார அதிகாரிகள் ஒப்புதல் அளித்தவுடன், சுகாதார அலுவலர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறை அதிகாரிகளுக்கு விரைவில் தடுப்பு மருந்து நிர்வகிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்தது.

கொரோனா தடுப்பு மருந்தின் மீதான மக்கள் பயத்தைப் போக்குவது தான் தனது முதற்பணி என்று ஜோகோ கூறினார்.

இந்தோனேசியாவைப் பொறுத்த மட்டில், ஹலால்  தொடர்பான பொருட்களுக்கு ஒப்புதல் வழங்கும் உலேமா கவுன்சில்,  (இஸ்லாம் மதகுருமார்களின் செல்வாக்கு நிறைந்த ஒன்று) தடுப்பூசியை ஒப்புதல் செயல்முறைக்கு உட்படுத்தும்.

இஸ்லாமியர்களை பெரும்பான்மையாக கொண்ட மலேசியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட  நாடுகள்  தடுப்பு மருந்தில் பன்றி இறைச்சி ஜெலட்டின் இருந்தாலும் வெகுஜனப் பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்துள்ளன.

கடந்த மாதம், வத்திக்கான் நகர் (Vatican City) வெளியிட்ட செய்திக் குறிப்பில், “கத்தோலிக்கர்களைப் பொறுத்த வரையில் கொரோனா  தடுப்பு மருந்து “தார்மீக ரீதியாக ஏற்றுக்கொள்ளத்தக்கவை” என்று தெரிவிக்கப்பட்டது.  கொரோனா தடுப்பு மருந்து கைவிடப்பட்ட கருக்களின் திசுக்களில் இருந்து உற்பத்தி செய்யப்படுவதாக  கத்தோலிக்கர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இந்த செய்திக் குறிப்பு வெளியானது.

எதிர்வரும் வாரங்களில் சினோவாக் தடுப்பூசியைப் பயன்படுத்த  அங்கீகாரம் அளிக்கும் ஒரு ஆணையை (அ) ஃபத்வாவை உலேமா கவுன்சில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், தடுப்பு மருந்து தொடர்பான அதன் ஆய்வறிக்கை நாட்டின் பழமைவாத இஸ்லாத் அமைப்புகளிடையே சில தாக்கங்களை ஏற்படுத்தக் கூடும்.

2018 ஆம் ஆண்டில் அம்மை நோய் வெடித்தபோது, உலக சுகாதார அமைப்புடன் இணைந்து, இந்தோனேசிய அரசு ஒரு உன்னத தடுப்பூசி திட்டத்தை அறிவித்தது. ஆனால், வெகுஜனப் பயன்பாட்டிற்கு தயாரிக்கப்பட்ட தடுப்பு மருந்தில் பன்றி இறைச்சி பொருட்கள்  சேர்க்கப்பட்டிருந்தது.

உலேமா கவுன்சில் தனது ஆய்வறிக்கையில், அம்மை நோய்க்கான தடுப்பு மருந்து ஹராம் என்றும் (தவிர்க்கப்பட்ட அல்லது புனித மற்றது) ,  பொதுமக்களின் நலன் கருதி அவசர நிலை காரணமாக அனுமதிப்பதாகவும் தெரிவித்தது.

இதன் காரணமாக, நாட்டில் செயல்படும் சில பழமைவாத இஸ்லாம் அமைப்புகள் ஹராம் தடுப்பூசி பயன்படுத்துவதை எதிர்த்தனர். 95 சதவீதம் என்ற அரசின் இலக்கு எட்டமுடியாமல் போனது.  நாட்டில்,10 மில்லியன் குழந்தைகளுக்குத் தடுப்பு மருந்து நிர்வகிக்கப்படவில்லை.