வியாழன், 7 ஜனவரி, 2021

காத்திருக்க வேண்டாம்; ஆன்லைனில் முன்பதிவு வந்தாச்சு..!

 இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக அரசு அலுவலகங்களில் பல சேவைகள் ஆன்லைன் வழியில் செய்வதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்த மக்களின் அடையாளமாக வழங்கப்பட்டுள்ள ஆதார் கார்டை திருத்தம் செய்ய ஆன்லைன் வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆதார் கார்டை திருத்தம் செய்யும் பயனர்கள் தங்களது வீட்டில் இருந்தபடியே திருத்தம் செய்யலாம்.

இதற்காக எந்த ஆதார் கேந்திரா அலுவலகத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இதன் மூலம் பயனர்கள் தங்களது பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி மற்றும் மொழி ஆன்லைனில் புதுப்பிக்கலாம். ஆனால், இந்த வசதியின் மூலம், குடும்பத் தலைவர் / கார்டியன் விவரங்கள் அல்லது பயோமெட்ரிக் புதுப்பிப்பு, மொபைல் எண்ணை ஆதார் உடன் இணைப்பது போன்ற பிற புதுப்பிப்புகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

மேலும் இந்த விவரங்களை புதுப்பிக்க பயனர்கள், ஆதார் சேவா கேந்திரா அல்லது ஆதார் விவரங்களை சேர்க்கை / புதுப்பிப்பு மையத்தை அணுக வேண்டும். மேலும் பயனர்களின் வசதிக்காக ஆதார் வழங்கும் அமைப்பு தனித்துவமான அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) ஆதார் திருத்தங்களை செய்வதற்கு, ஆதார் சேவா கேந்திரா மையத்தை தொடர்புகொள்ள ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய அனுமதிக்கிறது.

யுஐடிஏஐ இயங்கும் ஆதார் சேவா கேந்திரா மையத்தை தொடர்புகொள்ள ஆன்லைனில் முன்பதிவு செய்வது எப்படி?

முதலில் UIDAI இணைப்பைக் கிளிக் செய்க

அடுத்து நகரம் / இருப்பிடத்தைத் தேர்ந்தெடுக்கவும்

ஆதார் மையத்தை தொடர்புகொள்ள நியமனம் (Appointment) கிளிக் செய்து தொடரவும்

அடுத்து உங்களுடைய கைபேசி எண்ணை உள்ளிடவும்

அடுத்து கீழே குறிப்பிட்டுள்ள கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும்

தொடர்ந்து உங்கள் மொபைலில் கிடைக்கும் (OTP) ஒருமுறை கடவுச்சொல்லை உள்ளீடு செய்து உங்கள் ஆதார் விவரங்களை நிரப்பவும்

தொடர்ந்து உங்கள் தனிப்பட்ட தகவல்களை உள்ளீடு செய்ய வேண்டும். அடுத்து நீங்கள் ஆதார் சேவா கேந்திரா மையத்திற்கு செல்ல உங்களுக்கு விருப்பமான தேதி மற்றும் நேரத்தைத் தேர்ந்தெடுக்கவும்

நீங்கள் முன்பதிவு சந்திப்பு எண்ணைப் பெறுவீர்கள். அதனைத் தொடர்ந்து, நீங்கள் உங்கள் ஆதார் சேவா கேந்திரா மையத்தை பார்வையிட்டு ஆதார் கார்டில், தேவையான மாற்றங்களைச் செய்யலாம். ஆன்லைனில் சேவையை முன்பதிவு செய்வதற்கு மட்டுமல்லாமல், இது உங்களுக்கு நிறைய நேரத்தையும் மிச்சப்படுத்துகிறது.

மேலும் கூடுதலாக, விவரங்களை ஆன்லைனில் புதுப்பிக்க, ஆன்லைன் ஆதார் புதுப்பிப்பு கோரிக்கைக்கு உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் அவசியம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைலில் ஆதார் அங்கீகாரத்திற்கான OTP ஐப் பெறுவீர்கள்.

பதிவுசெய்தலின் போது அறிவிக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரி (Email address) மற்றும் மொபைல் எண்ணை நீங்கள் சரிபார்க்கலாம் அல்லது சமீபத்தில் வெற்றிகரமான புதுப்பிக்கப்பட்ட கோரிக்கைகளையும் சரிபார்க்கலாம்.