சனி, 30 ஜனவரி, 2021

கொரோனா தடுப்பூசியை யார் போட்டுக் கொள்ளலாம்? யாருக்கு போடக் கூடாது?

 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு தாமதம்

Who can take the Covid-19 vaccine, and who are advised not to :  ஜனவரி 14ம் தேதி அன்று யாருக்கெல்லாம் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்பது தொடர்பான முன்னெச்சரிக்கை மற்றும் முரண்பாடுகள் குறித்து அறிக்கை வெளியிட்டது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம். 18 வயது பூர்த்தி அடைந்தவர்களுக்கே தடுப்பூசி வழங்கப்படும். இரண்டாவது டோஸிற்கு மாற்று தடுப்பூசி வழங்கப்படாது. அதாவது முதலில் கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டிருந்தால் அடுத்த டோஸூம் கோவிட்ஷீல்ட் மட்டுமே. அவர்களுக்கு கோவாக்‌ஷின் வழங்கப்படாது. உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் உடல் நலம் தேறிய பிறகு நான்கு முதல் எட்டு வாரங்களுக்கு தடுப்பூசி போடப்படாது.

கர்ப்பிணிகள்

கர்ப்பகாலம் நோய் எதிர்ப்பு மண்டலத்தையும், வைரல் தொற்றுக்கான எதிர்ப்பையும் பொதுவாகவே மாற்றும். இது சில நேரங்களில் கடுமையான அறிகுறிகளாக பிரதிபலிக்கும். இது கோவிட்19க்கும் பொருந்தும். கர்ப்பிணி அல்லது பாலூட்டும் பெண்கள் யாரும் கொரோனா தடுப்பூசி பரிசோதனை கட்டங்களில் பங்கேற்கவில்லை. எனவே கர்ப்பமாக இருக்கும் பெண்கள் அல்லது கர்ப்பம் குறித்து உறுதியாக தெரியாத பெண்கள் மற்றும் பாலூட்டும் பெண்கள் இந்த நேரத்தில் தடுப்பூசியை பெற கூடாது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதுவும் சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் இடம் பெற்றதாகும்.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க 

நாள்பட்ட நோயாளிகள்

இதற்கு முன்பு சார்ஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள், நாள்பட்ட இருதய, நரம்பியல், நுரையீரல், வளர்ச்சிதை மாற்ற நோய்கள், சிறுநீரக கோளாறு உள்ளவர்கள், எச்.ஐ.வி நோயாளிகள் போன்றோரும் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளலாம். இதுவும் மத்திய சுகாதாரத்துறையின் கூடுதல் செயலாளர் மருத்துவர் மனோகர் அக்னனி ஜனவரி 14ம் தேதி அன்று மாநில தலைமைச்செயலாளர்கள், இயக்குநர்கள் மற்றும் நோய் தடுப்பு இயக்குநர்களுக்கு அனுப்பிய அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.

நீரிழிவு நோயாளிகள் மற்றும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்கள்

மரபணு பொறியியல் மற்றும் பையோடெக்னாலிஜியின் சர்வதேச மைய முன்னாள் இயக்குனர் வி.எஸ். சௌஹான் கூறுகையில், நீரிழிவு நோயாளிகள் பருமனானவர்களும் உரிமைப் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும். ஒவ்வாமை உள்ளவர்கள் தடுப்பூசி எடுக்க விரும்பினால் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இருப்பினும் அதிக அளவு இம்யூன் காம்ப்ரமைஸ்டுடன் இருப்பவர்களுக்கு தடுப்பூசி பெரிய அளவில் பிரச்சனை ஏற்படுத்தாது. ஆனால் ஆண்ட்டிபாடிகள் மிகவும் மெதுவாக செயல்படும் என்று அவர் கூறினார்.

தன்னார்வலர்கள்

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கோ-மோர்பிட் நிலைகளை கொண்டிருக்கும் தனிநபர்கள் தற்போது அதிக ஆபத்தில் இருப்பதால் அவர்கள் இந்த தடுப்பூசியை எடுத்துக் கொள்ளலாம். அவர்களின் மருத்துவ பரிசோதனைகள் தடுப்பூசியின் செயல்திறனில் பிரச்சனையாக இருக்காது என்று எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் ரந்தீப் குலேரியா கூறினார். தடுப்பூசியை பெற்றுக்கொள்வது தன்னார்வமானது. ஆனால் ஒருவர் தன்னையும் தன்னுடைய நெருங்கிய உறவுகளையும் பாதுகாத்துக் கொள்வதும் முக்கியம் என்று குலேரியா கூறினார். இந்தியாவில் கடந்த 13 நாட்களில் 28 லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள்?

இரத்தப்போக்கு மற்றும் உறைதல் போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. பாரத் பையோடெக்கின் அறிக்கை ஒவ்வாமை, ரத்தப்போக்கு பிரச்சனை, மற்றும் குறைவான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள், நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கும் வகையிலான மருந்துகள் எடுத்துக் கொள்பவர்கள் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். பப்ளிக் ஹெல்த் ஃபௌண்டேஷன் ஆஃப் இந்தியாவின் தலைவர் மருத்துவர் ஸ்ரீநாத் ரெட்டி, காம்ரமைஸ்ட் இம்யூனிட்டி கொண்டவர்களுக்கு செயலற்ற வைரஸை பெற்றிருக்கும் பாரத் பையோடெக் நிறுவனத்தின் தடுப்பூசிகளை பயன்படுத்துவது பாதுகாப்பானது என்று கூறியுள்ளார். ஆனால் சிகிச்சை அளிக்கும் மருத்துவர் தான் அதனை முடிவு செய்வார்.

source https://tamil.indianexpress.com/explained/who-can-take-the-covid-19-vaccine-and-who-are-advised-not-to-244771/