வாட்ஸ்அப் ஒரு சாதாரண மெசேஜிங் தளமாக அறிமுகமாகி, தற்போது உலகிலே அதிக பயனாளர்கள் பயன்படுத்தும் அளவிற்கு அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. சமீபத்தில் வாட்ஸ்அப் தனது புதிய பிரைவசி கொள்கையை அறிமுகப்படுத்தியது. இந்த புதிய கொள்கையை செயல்படுத்தவில்லை எனில் பிப்ரவரி 8-ம் தேதி முதல் அந்த செயலியை பயன்படுத்த முடியாது என அறிவித்திருந்தது. இதையடுத்து இந்த புதிய கொள்கைக்கு எதிராக வலுவான எதிர்ப்புகள் கிளம்பி பெரும் சர்சைக்கு உள்ளானது. எனவே வாட்ஸ்அப், தனது புதிய கொள்கை பற்றி பயனாளர்கள் மதிப்பாய்வு செய்வதற்காக கால அவகாசம் அளித்துள்ளது. அதோடு இந்த புதிய பிரைவசி கொள்கையை செயல்படுத்துவதை மே மாதம் 15-ம் தேதி வரை ஒத்திவைத்துள்ளது.
வாட்ஸ்அப் ஏன் புதிய பிரைவசி கொள்ளையை செயல்படுத்துவதை ஒத்திவைத்துள்ளது?
இந்த புதிய பிரைவசி கொள்கையை அறிவித்ததிலிருந்து பயனர்கள் இடையே நிறைய குழப்பங்கள் நிலவி வருகின்றது. ஏற்கனவே அதன் தாய் நிறுவனமான பேஸ் புக், பிரைவசி அணுகுமுறையில் உலக அளவில் நம்பிக்கை இழந்து வருகின்றது. எனவே பேஸ்புக் நிறுவனமும் அதன் பயனர் செய்திகளை வெளியிடுவதற்கு இது போன்ற அணுகுமுறைகளை பயன்படுத்தடுமா என்ற அச்சமும் பயனர்களிடையே தொற்றிக்கொண்டுள்ளது. அதோடு வாட்ஸ்அப்பின் இந்த புதிய பிரைவசிக் கொள்கையை பயனர்களால் புரிந்து கொள்ளவே முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. அதோடு இந்த கொள்கை மெசேஜிங் தளத்தில் எந்த அளவிற்கான பாதிப்பை ஏற்படுத்த உள்ளது என்பதும் யாரும் அறியப்படாத ஒன்றாக உள்ளது. ஆனால் அந்த நிறுவனமோ விருப்பம் இருந்தால் பயன்படுத்துங்கள் என்று கூறியுள்ளது.
வாட்ஸ்அப் தளத்தின் தற்போதைய நிலை?
வாட்ஸ்அப் மெசேஜிங் தளத்தை பொறுத்தவரை, அதன் புதிய பிரைவசி கொள்கையில் பெரிய மாற்றங்கள் ஏதும் செய்ய வாய்ப்பில்லை. ஆனால் வர்த்தக ரீதியாக பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப் குழுவிற்கு சில மாற்றங்களை கொண்டு வரலாம் எனக் கூறப்படுகின்றது. இந்த புதிய கொள்கையை ஜனவரி 8-ம் தேதியே செயல்படுத்த போவதாக அறிவித்திருந்தது. ஆனால் பயனர்களிடையே எழுந்த சர்ச்சையால் அதை மே மாதம் 15-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
இது பற்றி வாட்ஸ்அப் வெளியிட்டிருந்த அறிக்கையில், ” வாட்ஸ்அப் ஒரு சாதாரண புதிய சிந்தனையை உருவாக்கியுள்ளது. நீங்கள் உங்கள் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பகிரும் எந்த தகவலும் வெளியிடப்படாது. உங்களுடைய தரவுகளும், தகவல்களும் எந்த சமூக தளங்களிலும் பகிரப்படாத வண்ணம் பாதுகாப்பாக இருக்கும். நீங்கள் தொடர்பு கொள்ளும், மற்றும் மெசேஜ் செய்யும் நபரை பற்றிய பதிவுகளை சேகரிக்க மாட்டோம். அதோடு உங்களிடம் தொடர்பில் உள்ளோர்கள் பற்றியும், உங்களுடைய இருப்பிடம் (லொகேஷன்) பற்றிய தகவல்களை பேஸ் புக் போன்ற எந்த தளத்துடனும் பகிர மாட்டோம்” என்று கூறியுள்ளது.
இந்த அறிக்கை வாட்ஸ்அப் பயனர்களின் வெளியேற்றத்தை தடுக்க உதவுமா?
இந்த அறிக்கையில் கூறுவது போல வாட்ஸ்அப் தனது புதிய கொள்கையை செயல் படுத்தினால் பயனாளர்கள் மற்ற மெசேஜிங் தளங்களுக்கு மாற வாய்ப்புகள் குறைய வாய்ப்பு உள்ளது. ஆனால் இது போன்ற அறிக்கைகளுக்கு பின்னர் அது பயன் தருமா என்றால் பெரும் கேள்வி தான் எழுகின்றது. ஏற்கவே வாட்ஸ்அப் தளமும், பேஸ் புக் தளமும் ஒன்றோடு ஒன்று தொடர்பில் உள்ளவர்கள் என்பது இந்த சர்ச்சையின் மூலம் வெளி உலகிற்கு தெரிய வந்துள்ளது. அதோடு பேஸ் புக்கின் பிரைவசி அணுகுமுறைகள் பற்றிய சர்ச்சைகளும் எழுந்துள்ளன. எனவே பயனர்கள் மீண்டும் இந்த செயலியை பயன்படுவது குறித்து கண்டிப்பாக யோசிக்க முற்படுவார்கள் என்று தெரிகிறது.
இந்தநிலையில் வாட்ஸ்அப்பின் பயனர்கள் தற்போது சிக்னல் மற்றும் டெலிகிராம் போன்ற மெசேஜிங் தளங்களை பயன்படுத்த துவங்கியுள்ளனர். இந்த இரு தளங்களும் புதிய பயனர்களுக்கு சேவையை வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அதோடு சிக்னல் தளத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று புதிய பயனர்களின் வருகையால், அந்த தளமே பெரும் அதிர்வை சந்தித்துள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் பயன்படுத்திய தங்களது நண்பர்கள் வேறு தளங்களுக்கு மாறும் போது தொடர்பில் உள்ளவர்களும் வேறு தளங்களுக்கு மாறுவார்கள். எனவே வாட்ஸ்அப் நீண்ட காலமாக கட்டி வைத்திருந்த இந்த சமூக வலைதள கோட்டை பயனர்கள் இல்லாமால் சுக்கு நூறாக உடைந்து விடும். அப்படி ஆகி விடக்கூடாது என்கிற பீதியிலே இந்த புதிய கொள்கைகளை செயல் படுத்திடுவதில் தாமதம் காட்டி வருகின்றது வாட்ஸ்அப்.