புதன், 10 நவம்பர், 2021

ஸ்மார்ட் சிட்டி திட்டம்: ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

 09 11 2021 

அதிமுக ஆட்சிக் காலத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் நிறைவேற்றப்பட்டதில் குளறுபடி ஏற்பட்டதாக தமிழக முதலமைச்சர் மு.க. குற்றம் சாட்டினார். மேலும், மழைக் காலத்துக்குப் பிறகு விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

கடந்த அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்டதாக கூறிய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விசாரணை கமிஷன் அமைத்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்திய ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

சென்னையில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியதாவது: “ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்துகிறோம் என்ற பெயரில் மத்திய அரசிடம் இருந்து பல கோடி ரூபாய் பெறப்பட்டது. அவர்கள் அதை என்ன செய்தார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. இந்த மழை முடிந்த பிறகு விசாரணை கமிஷன் அமைக்கப்படும்.

எஸ்.பி வேலுமணி தலைமையில் உள்ளாட்சி நிர்வாகத் துறையில் எந்தப் பணியும் நடைபெறவில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக கமிஷன் பெற்றுள்ளனர் என்பது தெளிவாக உள்ளது. ஆனாலும், நாங்கள் எங்கள் வேலையை நிர்வகித்து முன்னேறி வருகிறோம். ஒப்பந்ததாரர்கள் மற்றும் ஒப்பந்தத்தை எடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேட்டதற்கு, அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

சென்னையின் நிலைமை எப்படி இருந்தது என்ற கேள்விக்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: “மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளிலும் திமுக சார்பிலும், அரசு சார்பிலும் பணிகள் நடந்து வருகின்றன. உணவு, தங்குமிடம், மருத்துவ முகாம்கள் போன்ற அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்ய நாங்கள் செயல்படுகிறோம்.” என்று கூறினார்.

மேலும், வெள்ளம் குறைந்துள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெள்ளம் ஓரளவு குறைந்துள்ளது, ஆனால் முழுமையாகக் குறையவில்லை என்றார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/cm-mk-stalin-says-action-will-be-taken-against-contractors-of-smart-city-project-367000/

Related Posts:

  • யாராலும் தடுக்க முடியாது! பாஜகவின் மதவாதத்தால் இந்திய தேசம் துண்டு துண்டாக சிதறிப் போவதை யாராலும் தடுக்க முடியாது! அண்ணா ஹசாரே பேட்டி!! +++++++++++++++++++++++++++++++++++++… Read More
  • தமிழ்நாட்டிலும் செய்ய முற்படுகிறார்கள்! தமிழச்சி - Tamizachi: தமிழகத்தில் #பாஜக பிரமுகர்கள் தொடர் படுகொலைகள் செய்யப்படுவதை கண்டித்து அக்கட்சியை சேர்ந்த பெண் தீக்குளித்து இறந்திருக்கி… Read More
  • News Drops First time in History , Pudukkottai dist, Face - No Rain fall ( No Seasonal, South East monsoon Rain)2013  … Read More
  • பொய் செய்தி நாகை புகழேந்தி தேசத் தொண்டனாம்!.... முஸ்லிம்கள் கொலை செய்தார்களாம்!.....தமிழிசை சௌந்தரராஜன் நேற்று சன் தொலைக்காட்சியில் வன்முறை பேச்சு பேசினாங்க!..… Read More
  • தொடரும் கொலை தமிழகத்தில் இந்துத்துவ வெறியை ஊட்ட திட்டமா ? இந்து முன்னணி மற்றும் பி ஜே பி யினர் தொடரும் கொலைகள் ஏன் 2014 லில் மோடியை பிரதமராக்க திட்டமிட்டு கட்சி… Read More