சனி, 11 டிசம்பர், 2021

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 2 வீரர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டது – இந்திய ராணுவம்

 Lance Naik BS Teja Vivek Kumar bodies identified

Lance Naik BS Teja Vivek Kumar bodies identified : குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்த வீரர்களின் 2 உடல்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆந்திராவை சேர்ந்த சாய் தேஜா மற்றும் மற்றொரு வீரரான விவேக் குமாரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது என்றும் உடல்களை குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. எஞ்சிய வீரர்களின் உடல்களை அடையாளம் காணும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நான்கு வீரர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்களின் உடல்களை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

8ம் தேதி அன்று கோவையின் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து நீலகிரியின் வெலிங்டனை நோக்கிய பயணம் செய்த எம்.ஐ. ஹெலிகாப்டர் குன்னூரின் நஞ்சப்பசத்திரம் பகுதியில் விபத்திற்குள்ளானது. நொறுங்கி விழுந்த ஹெலிகாப்டர் தீப்பிடித்து எரிந்ததால் ஹெலிகாப்டரில் பயணம் செய்தவர்களை அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட்டது.

ஏற்கனவே இந்திய முப்படைத் தளபதி பிபின் ராவத், அவருடைய மனைவி மதுலிக்கா ராவத்தின் உடல்கள் நேற்று தகனம் செய்யப்பட்டது. இருப்பினும் எஞ்சியுள்ளவர்கள் யார் என அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விபத்தில் இருந்து உயிர் தப்பிய குரூப் கேப்டன் வருண் பெங்களூரில் மேல் சிகிச்சைக்காக கமாண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் நலம் பெற்று வீடு திரும்புவார் என்று அவரது குடும்ப உறுப்பினர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/coonoor-helicopter-crash-lance-naik-bs-teja-vivek-kumar-bodies-identified-381635/

Related Posts: