இந்தியாவில் ஒமிக்ரான் வைரச் 2 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறுகையில், ஒமிக்ரான் வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட 2 பேரும் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் மாறுப்பாடான ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவக்கூடியது என்றும் ஒமிக்ரான் பாதிப்பு உள்ளவர்களுக்கு அறிகுறிகள் வெளிப்படுவதில்லை என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கர்நாடகாவில் கோவிட் மாறுபாடு ஒமிக்ரான் வைரஸ் தொற்று 2 பேருக்கு கண்டறியப்பட்டதை சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை உறுதிப்படுத்தியது.
“ஒமிக்ரான் வைரஸ் கர்நாடகாவைச் சேர்ந்த 46 வயதுடைய ஆணுக்கும் மற்றொன்று 66 வயதுடைய ஆணுக்கும் ஓமிக்ரான் மாறுபாடு மரபணு வரிசைமுறை மூலம் உறுதிப்படுத்தப்பட்டது” என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் கூறினார்.
ஒமிக்ரான் வைரஸ் குறித்த உலகளாவிய கவலைகளைக் கருத்தில் கொண்டு, செவ்வாய்க்கிழமை இரவு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வழங்கிய வழிகாட்டுதல்களின் கீழ், ஆபத்திலுள்ள’ நாடுகளில் இருந்து மாநிலத்திற்கு வரும் பயணிகளுக்கு ஏழு நாள் நிறுவன தனிமைப்படுத்தலை மகாராஷ்டிரா அரசு கட்டாயப்படுத்தியுள்ளது. அத்தகைய பயணிகள் வந்த பின்னர், இரண்டாவது, நான்காவது மற்றும் ஏழாவது நாளில் RT-PCR சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். கோவிட்-19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டால், பயணி மருத்துவமனைக்கு மாற்றப்படுவார். சோதனை எதிர்மறையாக இருந்தால், பயணி இன்னும் ஏழு நாள் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/india/omicron-two-cases-of-omicron-covid-variant-found-in-india-377790/