5 12 2021 கொரோனாவுக்கு எதிரான போரில் தடுப்பூசி முக்கிய ஆயுதமாக பார்க்கப்படுகிறது. கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ள நிலையில், மீண்டும் உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் கொரோனா பரவ தொடங்கியுள்ளாதால், தடுப்பூசி செலுத்தும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி நேற்று(டிசம்பர்.4) மட்டும் ஒரே நாளில் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தகுதி உள்ள மக்களில் 50 விழுக்காடு பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இதுமட்டுமின்றி, மாநிலங்களில் 21.38 கோடி தடுப்பூசி உபயோகிக்காமல் கையிருப்பில் உள்ளது.
நேற்று பிகாரில் 15.33 லட்சம் தடுப்பூசிகளும், தமிழ்நாட்டில் 14.84 லட்சம் தடுப்பூசிகளும், ராஜஸ்தானில் 10.8 லட்சம் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசி எடுத்துகொள்ள தகுதியுடையவர்களில் 85 விழுக்காடு பேர் முதல் டோஸை பெற்றுள்ளனர். 50 விழுக்காடு மக்கள் இரண்டாம் டோஸை பெற்றுள்ளனர்.
நேற்றைய நிலவரப்படி, இந்தியாவில் ஆக்டிவ் கேஸ்கள் 99,974 ஆக உள்ளது. இது மார்ச் 2020 க்குப் பிறகு மிகக் குறைவு ஆகும்.
ஆனால், அண்மையில் 30 மாவட்டங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக மத்திய சுகாதார துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஐந்து மாநிலங்களுக்கும், ஐம்மு காஷ்மீருக்கும் எச்சரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, ஒடிசா, மிசோரம் மற்றும் ஜே&கே ஆகிய மாநிலங்களில் நவம்பர் 26-ம் தேதியுடன் ஒப்பிடுகையில், டிசம்பர் 3ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் புதிய பாதிப்புகள் அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாசிட்டிவ் ஆன நபர்களின் மாதிரிகளின் மரபணு பரிசோதனைக்காக அனுப்பி வையுங்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுக்கு ராஜேஷ் பூஷன் எழுதிய கடித்ததில் கூறியிருப்பதாவது, “மத்திய அரசின் அனைத்து வழிகாட்டு நெறிமுறைப்படி விமானநிலையங்களில் கண்காணிப்பை அதிகப்படுத்த வேண்டும். சென்னை,திருவள்ளூர்,வேலூர் மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/india/rising-numbers-in-over-30-districts-are-a-bit-of-concern-for-the-health-ministry/