சனி, 4 டிசம்பர், 2021

அதிமுக ஆட்சியில் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையில் முறைகேடு

 SC ST students funds, tamil nadu , tamil news

SC ST students funds : 2011-2014-க்கு இடைப்பட்ட காலத்தில் பட்டியல் இனத்தவர் மற்றும் பட்டியல் பழங்குடி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி உதவித் தொகையில் ரூ.17.36 கோடி மோசடி நடந்துள்ளதாக எழுந்த புகாரை அடுத்து லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு.

பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், மருத்துவம், அரசு மற்றும் கலைக் கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களிலும் எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி உதவித் தொகையில் மோசடி நடந்திருப்பதாக வழக்கறிஞர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கில் 52 கல்லூரி முதல்வர்கள், கல்லூரி மேற்படிப்பு இணை இயக்குநர்கள் 7 பேர், ஆதி திராவிட மற்றும் பழங்குடி நலத்துறை அதிகாரிகள் 11 பேரை விசாரிக்க உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வியாழக்கிழமை பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் 2011-2014 ஆம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கைகள் உள்ளூர் நிதி தணிக்கைத் துறையிலிருந்து சேகரிக்கப்பட்டன. எஸ்சி/எஸ்டி கல்வி உதவித்தொகை கோரி அரசு ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்கள் மேலாண்மை ஒதுக்கீட்டில் சேர்ந்தவர்களாக காட்டி அரசுக்கு ரூ. 4.34 இழப்பு ஏற்படுத்தியது தெரியவந்துள்ளது. மற்ற முறைகேடுகள் குறித்தும் விசாரணை தீவிரப்படுத்தப்படும் என்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/dvac-to-conduct-enquiries-over-misappropriation-of-sc-st-students-funds-378395/