7 12 2021 அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழக ஆய்வாளர் ஹென்றி டேனியல் தலைமையிலான குழுவினர், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் சூயிங் கம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த சூயிங் கம், தாவரத்தில் உருவான புரோட்டினுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது உமிழ்நீரில் வைரஸ் இருப்பை குறைத்து அதன் பரவலை தடுக்கிறது. இதுதொடர்பான ஆய்வறிக்கை மாலிகுலர் தெரபி இதழில் வெளியிடப்பட்டுள்ளது
பாதிக்கப்பட்ட நபர் தும்மும் போதும், இருமும் போதும் அல்லது பேசும் போதும் வைரஸ் வெளியேறி மற்றவர்களுக்கு பரவுகிறது. இந்த சூயிங் கம், உமிழ்நீரில் உள்ள வைரஸை டார்கெட் செய்கிறது.
மனித உடலில் சுவாச செல்களில் காணப்படும் ஏசிஇ2 புரோட்டினுடன் கொரோனா வைரசின் முள் பகுதிகள் ஒட்டிக் கொண்டு மனித உடலுக்குள் நுழைகின்றன. எனவே இந்த சூயிங் கம், ஏசிஇ2 புரோட்டினை கொரோனா வைரஸ் கரைக்க முடியாத படி வலுவாக்கி, உடலில் வைரஸ் பரவுவதை தடுக்கிறது.
தொற்றுநோய்க்கு முன், ஹென்றி டேனியல் உயர் இரத்த அழுத்த சிகிச்சைக்காக ACE2 புரோட்டின் குறித்து ஆய்வு மேற்கொண்டிருந்தார். அவரது ஆய்வத்தில் காப்புரிமை பெற்ற தாவர அடிப்படையிலான உற்பத்தி முறையில் ஏசிஇ2 புரோட்டின் ஆய்வு நடத்தப்படுகிறது.
இதுமட்டுமின்றி, டேனியலும், அவரது சக ஆராய்ச்சியாளர் ஹியூனும், பல் பிளேக்கை தடுத்திட தாவர அடிப்படையிலான புரோட்டின் கொண்ட சூயிங் கம்மை உருவாக்கும் பணியிலும் உள்ளனர்.
கொரோனா தொற்று உறுதியான நோயாளிகளிடமிருந்து நாசோபார்னீஜியல் ஸ்வாப் முறையில் பெறப்பட்ட மாதிரிகளை வைத்து சோதனை செய்ததில், ACE2 கொரோனா வைரஸை சமநிலையாக்குவதை காணமுடிந்தது. இந்த சூயிங் கம்மின் அடுத்தக்கட்ட சோதனை விரைவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/explained/a-plant-based-chewing-gum-that-traps-coronavirus-379710/