7 12 2021
Vladimir Putin visit to India : ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் சுருக்கமான மற்றும் முக்கியமான இந்திய வருகை உலக நாடுகளால் உற்று நோக்கப்பட்டது. கொரோனா தொற்று காலத்தில் வெளியே எங்கே அதிகம் செல்லாத ரஷ்ய அதிபர், கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில் டெல்லிக்கு வந்துள்ளார். ஜெனிவாவில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்திக்க புடின் பயணமானார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்யாவில் இருந்து புடின் வெளியே வந்தது இது இரண்டாவது முறையாகும்.
இருப்பினும் கடந்த 7 சகாப்தங்களாக இந்தியாவுடன் ரஷ்யா வரலாற்று ரீதியான உறவை கொண்டுள்ளது. உறவு சில பகுதிகளில் தேக்கமடைந்தாலும், சிலவற்றில் சிதைந்தாலும், மூலோபாய கூட்டாண்மையின் வலுவான தூண் பாதுகாப்பு ஆகும்.
பல்வேறு நாடுகளில் இருந்து கொள்முதல்களை இந்தியா மேற்கொண்டாலும், நாட்டின் பெரும்பாலான பாதுகாப்பு உபகரணங்கள் ரஷ்யாவிடம் இருந்து பெறுகிறது. இந்தியாவின் 60 முதல் 70% ராணுவ உபகரணங்கள் ரஷ்யாவிடம் இருந்தே பெறப்படுகிறது. மேலும் புது டெல்லிக்கு ரஷ்ய பாதுகாப்புத் துறையில் இருந்து உதிரி பாகங்களுக்கு ரஷ்யாவிடமிருந்து வழக்கமான மற்றும் நம்பகமான விநியோகம் தேவைப்படுகிறது.
மோடி சீன தலைமை ஸி மற்றும் புடின் ஆகிய இருவருடன் மட்டுமே மோடி முறைசாரா உச்சி மாநாடுகளை நடத்தியுள்ளார். எல்லையில் பதற்றம் நிலவி வரும் இந்த நேரத்தில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவம் மற்றும் அரசாங்கத்தில் உள்ள ரஷ்ய உயர்மட்ட அதிகாரிகளுடன் – S-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கல் மற்றும் புதிய அமைப்புகளை வாங்குவது பற்றி ஆலோசனை நடத்தினார்.
சமீபத்தில் பெய்ஜிங் ரஷ்யாவின் செல்வாக்கை பெற்றுள்ளது. அதே நேரத்தில் மாஸ்கோவுடன் புதுடெல்லி வலுவான இருதரப்பு உறவுகளின் வரலாற்றைக் கொண்டுள்ளது என்ற புரிதலில் இருந்து பாய்கிறது. எனவே இந்த ஆலோசனைக் கூட்டம் மிகவும் குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது.
தாலிபான்களால் ஆட்சி செய்யப்படும் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளிவரும் பாதுகாப்பு நிலைமைகள் சவாலாக இருப்பதால் இரு தரப்பிற்கும் பயங்கரவாதம் பற்றிய கவலைகள் உள்ளது. மோடியும், புடினும் திங்கள்கிழமை இரு நாடுகளுக்கும் பொதுவான அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாதம் குறித்து கவனம் செலுத்தினார்கள்.
பயங்கரவாத அச்சுறுத்தல்கள், பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி, ஆயுதம் மற்றும் போதைப்பொருள் வர்த்தகம் போன்றவற்றின் அச்சுறுத்தல் விவகாரத்தில் இரு தரப்பினரும் மிகவும் நெருக்கமாக பணியாற்றியுள்ளதாகவும் இது கூட்டு அறிக்கையில் பிரதிபலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டாரங்கள் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன.
ரஷ்யா-இந்தியா-சீனா (ஆர்ஐசி), பிரிக்ஸ் மற்றும் எஸ்சிஓ (ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு) ஆகிய மூன்று முக்கிய பலதரப்பு குழுக்களில் டெல்லியும் மாஸ்கோவும் இணைந்து பணியாற்றியுள்ளதாகவும், இருதரப்பு கூட்டங்களில் இந்த உரையாடல் முன்னெடுக்கப்படும் என்றும் அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டாரம் சுட்டிக்காட்டியுள்ளது.
சமீபத்திய ரஷ்யா-இந்தியா-சீனா சந்திப்பில், நிதி நடவடிக்கை பணிக்குழுவை (FATF) குறிப்பிடுவது குறித்து இந்தியா கடுமையாக பேச்சுவார்த்தை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இரு தரப்பினரும் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகப்படுத்தி வருகின்றனர். உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, இந்தியா-ரஷ்ய கூட்டு முயற்சியால் அமேதியில் உள்ள கோர்வாவில் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான துப்பாக்கிகளை தயாரிப்பதற்காக, கிட்டத்தட்ட ரூ. 5,000 கோடி மதிப்பிலான ஏகே 203 கலாஷ்னிகோவ் ரைபிள்கள் ஒப்பந்தம் நீண்ட காலமாக நிலுவையில் இருந்தது. அதற்கு இந்திய தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.
பாதுகாப்புத் துறைகளில் ஒத்துழைப்பதில், ராணுவ தளவாடங்கள் மற்றும் தளங்களின் கூட்டுத் தயாரிப்பு மற்றும் இணை மேம்பாடு ஆகியவற்றில் இரு தரப்பும் கவனம் செலுத்த உள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
source https://tamil.indianexpress.com/explained/why-vladimir-putin-visit-to-india-is-significant-379693/