முப்படைத் தளபதிக்கு வீர வணக்கத்தை செலுத்துகிறேன் என வெலிங்டன் ராணுவத் தளத்தின் வருகை பதிவேட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பு எழுதியுள்ளார்.
இந்தியாவின் முதல் பாதுகாப்புப் படைத் தலைவர் பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர், குன்னூர் பகுதியில் விபத்துக்குள்ளானதில், பிபின் ராவத் அவரது மனைவி மற்றும் 11 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரியில் இன்று பிற்பகல் கேடட் உரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருந்த முப்படை தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் தரையிறங்க இருந்த ஹெலிபேடில் இருந்து சுமார் 10 கிமீ தொலைவில் விபத்துக்குள்ளானது.
இதனையடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மாலை 5 மணிக்கு கோவைக்கு தனி விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றனர். கோவை விமான நிலையம் வந்தடைந்த முதல்வர் ஸ்டாலின், சாலை வழியாக விபத்து நடந்த குன்னூர் பகுதி சென்றார்.
அங்கு வெல்லிங்டனில் ராணுவ அதிகாரிகளிடம் விபத்து குறித்து கேட்டறிந்தார்.
பின்னர், வெலிங்டன் ராணுவத் தளத்தின் வருகை பதிவேட்டில், தாய் திருநாட்டின் வீரத்திருமகன் விபத்தில் உயிர் இழந்ததற்கு நாடு பெறுகிற துன்பத்தில் நானும் இணைந்து எனது வீர வணக்கத்தை செலுத்துகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பு எழுதினார்
source https://tamil.indianexpress.com/tamilnadu/cds-rawat-chopper-crash-cm-stalin-coonoor-380601/