வியாழன், 9 டிசம்பர், 2021

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து : முப்படை தளபதியுடன் பயணம் செய்தவர்கள் யார்?

 8 12 2021 Coonoor Helicopter Accident Update : கோவை மாவட்டம் சூலுரில் இருந்து முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 14 ராணுவ அதிகாரிகளுடன் புறப்பட்ட ஹலிகாப்டர் நீலகிரி மாவட்டம் குன்னுர் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு சென்றபோது விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் குன்னுரில், உளள வெலிங்டனில் ராணுவ உயர் அதிகாரிககுக்கான பயிற்சி கல்லூரி உள்ளது. இந்த பயிற்சி கல்லூரியில் இன்று நடைபெறவிருந்த விழாவில் பங்கேற்பதற்காக தமிழகம் வந்த இந்திய ராணுவத்தின் முப்படை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி மற்றும் அதிகாரிகள் உட்பட 14 பேருடன் கோவை மாவட்டம் சூலுரில் உள்ள ராணுவ விமான தளத்தில் இருந்து ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட எம்.ஐ.17வி5 ரக ஹெலிகாப்டர் மூலம் காலை 11.30 மணிக்கு புறப்பட்டனர்.

இந்த ஹெலிகாப்டர் நீலகிரி குன்னூர் பகுதியில் நஞ்சப்ப சத்திரம் பகுதியில் சென்றபோது பனிமூட்டம் அதிகமான நிலவியதால், விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர், பெரிய மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் காரணமாக ஹெலிகாப்டர் தீப்பிடித்து எரிந்த நிலையில், ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரும் விபத்தில் சிக்கிக்கொண்டனர். இதில் தற்போது வரை 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில், படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய ஒருவரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சம்பவ இடத்தில் மீட்பு படையினர் தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், வனத்துறை அமைச்சர், நீலகிரி மாவட்ட கலெக்டர், ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்துளளனர். ஹெலிகாப்டர் தொடர்ந்து எரிந்துகொண்டிருப்பதால் மீட்புபணிகள் தாமதமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த ஹெலிகாப்டரில்,

பிபின் ராவத், (முப்படை தளபதி)

மதுலிகா ராவத், (பிபின்ராவத் மனைவி)

பிரிகேடியர் லிடர்,

லெப்டினன் கர்னர் ஹர்ஜிந்தர் சிங்,

குர்சேவர் சிங்,

ஜிஜேந்தர் குமார்,

விவேக் குமார்,

சார் தேஜா,

கவில்தார் சத்பால்

உள்ளிட்டோர் பயணம் செய்துள்ளனர். இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக இந்திய விமானப்படையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை 4.30 மணியளவில் குன்னூர் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-coonoor-helicopter-accident-in-genn-bipin-rawat-with-his-wife-380431/