நமது உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகள் அவசியமானது. பெரும்பாலான பழங்கள் ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ நன்மைகளுடன் நிரம்பியுள்ளதால், பல நோய்களை எதிர்த்துப் போராட உதவும் அந்த வகையில் நமக்கு நன்மை தரும் மிகவும் ஆரோக்கியமான பழங்களில் ஒன்று பப்பாளி.
பப்பாளி பழம் மட்டுமல்ல, அதன் இலைகளிலும் பல மருத்துவ நன்மைகள் அடங்கியுள்ளன. பப்பாளி இலைகள் இரத்த பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்கச் சிறந்தவை மற்றும் மலேரியா எதிர்ப்பு பண்புகள் நிரம்பியுள்ளது. , டெங்கு காய்ச்சல் மற்றும் பிற நோய்களுக்கு எதிராக பப்பாளி இலை மிகுந்த மருத்துவ தன்மை உள்ளதாக ஆயுர்வேத நிபுணர் டாக்டர் டிக்ஸா பவ்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் டெங்கு காய்ச்சலை எதிர்த்துப் போராடவும், உடலில் பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்கவும் பப்பாளி பழம் மற்றும் இலைகளை உட்கொள்ளும் சில வழிகளை அவர் எடுத்துரைத்துள்ளார்
பப்பாளிச் இலையில் இருந்து தயாரிக்கப்படும் சாறு டெங்கு காய்ச்சலின் அறிகுறிகளை எதிர்த்துப் போராடுவது மட்டுமல்லாமல், அதைக் குணப்படுத்தவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இரத்த பிளேட்லெட்டுகளை மேம்படுத்த பப்பாளி இலைகளை பயன்படுத்தலாம்.
பப்பாளி இலைகளை ஒரு கைப்பிடி எடுத்து நன்கு கழுவிய பின் சிறிது காய வைக்கவும். அவற்றை சிறிய துண்டுகளாக வெட்டி, 2 லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து, பாதியாக குறையும் வரை கொதிக்க வைக்கவும். தண்ணீர் பாதியாக குறைந்ததும், அதனை வடிகட்டி, குடிக்கலாம்.
பழுத்த பப்பாளி பழத்தை தினமும் சாப்பிடுவதோடு, ஒரு கிளாஸ் பப்பாளி சாற்றில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து குடித்து, சுவையை அதிகரிக்கும்ஃ மேலும் வைட்டமின் சி அதிகளவு கிடைக்கும். இந்த சாற்றை ஒரு நாளைக்கு குறைந்தது 2-3 முறையாவது குடிக்க வேண்டும் மேலும் இது “டெங்கு காய்ச்சலை விரைவாக குணப்படுத்தும்.
சில பப்பாளி இலைகளை எடுத்து நசுக்கவும், அதில் இருந்து சாறு எடுத்து ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிக்கவும். இவ்வாறு குடிக்கும்போது இரத்தத்தில் ப்ளேட்லேட் எண்ணிக்கை மேம்படும் மற்றும் உடல் ஆரோக்கியத்தில் பெரிய நன்மைகளை கொடுக்கும்.
source https://tamil.indianexpress.com/lifestyle/tamil-health-papaya-leaves-benefits-update-in-tamil-377876/