ஒமைக்ரான் வைரஸ் தொடர்பான கண்காணிப்பை தீவிரப்படுத்த சென்ற இடத்தில் சுகாதாரத்துறை செயலர் ராதாக்கிருஷ்ணன் கார் விபத்தில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
மாநிலத்தில் உள்ள விமான நிலையங்களில் ஒமிக்ரான் பரிசோதனையை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்ரமணியன் தலைமையில் அதிகாரிகள் மாவட்டந்தோறும் உள்ள விமான நிலையங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்று, ஒமைக்ரான் வைரஸ் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மதுரை விமான நிலையத்தில் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பின்னர் விமான நிலையத்திலிருந்து அமைச்சரின் வாகனமும், சுகாதார துறை செயலரின் வாகனமும் அடுத்ததடுத்து புறப்பட்டு சென்றது.
அப்போது, சுகாதாரத் செயலரின் வாகனம் மதுரை விமான நிலைய தடுப்புக் கம்பியில் கார் மோதியது. இவ்விபத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் காயமின்றி தப்பினார். இதையடுத்து, வேறு கார் வரவழைக்கப்பட்டு ராதாகிருஷ்ணன் தனது பயணத்தைத் தொடர்ந்தார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-health-secretarys-car-hits-steel-barricade-at-madurai-airport/