சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கரவாகனத்தின் சக்கரத்திற்குள் போக்குவரத்து போலீசார் லத்தியை நுழைத்ததால், நிலை தடுமாறி விழுந்து குழந்தை உட்பட மூன்று பேர் காயம் அடைந்தனர்.
மதுரை வில்லாபுரம் ஆர்ச் அருகே அவனியாபுரம் போக்குவரத்து போலீசார் சோதனையின்போது ஸ்மிதா என்ற பெண்ணின் வாகனத்தை வழி மறித்துள்ளனர். வாகனத்தை ஓரமாக நிறுத்துவதற்குள், ஸ்மிதாவின் இருசக்கர வாகன சக்கரத்தில் போலீசார் லத்தியை நுழைத்ததாக தெரிகிறது.
இதில் வாகனம் நிலைதடுமாறியதில் குழந்தை உட்பட மூவரும் சாலையில் விழுந்தனர். இதுதொடர்பாக போக்குவரத்து போலீசாருடன் அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக ஐ.ஜி. முருகனிடம் கேட்டதற்கு விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.