RSS இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பேசியுள்ளார்.
அண்மையில் பாஜகவை சேர்ந்தவர்களும், பாஜகவின் தாய் கழகமான RSS ஐ சேர்ந்தவர்களும் இஸ்லாமியர்கள் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்ற நச்சு கருத்தை கூறி வருகின்றனர்.
இந்துத்துவ மதவெறி கூட்டங்களுக்கு சம்மட்டி அடி கொடுக்கும் விதமாக பேசிய பீகார் முதல்வர் நிதிஷ் குமார் RSS இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்றும், இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்குபெறாமல் ஓடி ஒளிந்தவர்கள் தேசப்பற்றை பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை என்று சரளமாக விளாசி தள்ளியுள்ளார்.