மன உளைச்சல் காரணமாக பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இளம் கைப்பந்து வீராங்கனை தற்கொலை செய்து கொண்டார்.
பட்டியாலாவைச் சேர்ந்த 19 வயது வீராங்கனையான பூஜா குமாரி தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்தார். தேசிய மற்றும் கல்லூரி அணியில் பங்கேற்று விளையாடியுள்ள பூஜா குமாரி, விடுதியில் தங்கி பயின்று வந்தார். சக மாணவர்கள் அவரை கடந்த சில நாட்களாக விடுதிக்குள்ளே அனுமதிக்க மறுத்துள்ளனர்.
வசதி படைத்தவர்கள் தங்கும் விடுதியில் ஏழை மாணவியான பூஜா குமாரி தங்கக் கூடாது என்றும் அவர்கள் கூறிவந்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர், இன்று அதிகாலை கல்லூரி விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை தொடர்பாக பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ள பூஜா குமாரி, தனது குடும்பத்திற்கு உதவி செய்யும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார்.
August 21, 2016 - 04:32 PM
Source: New gen media ( http://tv.puthiyathalaimurai.com/detailpage/ImportantNews/sports/10/50041/handball-player-kills-self-over-sports-quota-denial)