செவ்வாய், 9 மே, 2017

ரூ.100, 200 பேரம் பேசி இளைஞர்களின் பேன்டை உருவி விடும் விபச்சார அரவாணிகளின் அட்டூழியம்! கிரைம் ரிப்போர்ட் !!

Untitled
பெண்கள் விபச்சாரத்தை விட அதிக அளவில் அரவாணிகள் விபச்சாரம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை, சேலம், மதுரை, ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான அரவாணிகள் செக்ஸ் தொழிலை போலீஸ் அனுமதியுடன் செய்து வருகின்றனர்.
சென்னையில் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியான வள்ளுவர் கோட்டம், சூளைமேடு, கோயம்பேடு, வடபழனி, டி.நகர், அபிபுல்லாநகர், எக்மோர் ரயில்நிலையம் பின்புறம், பெரியமேடு ஆகிய பகுதிகளின் ஒதுக்கு புறங்களில் இரவு நேரங்களில் போலீஸ் பாதுகாப்புடன் அரவாணிகள் ஏராளமானோர் பெண்கள் போல் வேடம் அணிந்து நின்று கொண்டு, அந்த பகுதியில் வரும் இளைஞர்களை செக்ஸ்க்கு அழைத்து வருகின்றனர்.
சபலபுத்தியுள்ள இளைஞர்கள் பலர் அரவாணிகளை பெண்கள் என நினைத்து அருகே சென்று, ரேட் கேட்பார்கள் அவர்கள் வெறும் 100, 200 கொடுத்தா போதும் என கூறி, இளைஞர்களை ஆட்டோவில் ஏற்றி  வீடுகளுக்கு அழைத்து செல்வர்.
அங்கு ஏராளமான அரவாணிகள் சூழ்ந்து கொண்டு, இளைஞர்களிடம் இருக்கும் பணம், நகை, வாட்ச் போன்ற பொருட்களை பிடிங்கிக் கொண்டு, சில அரவாணிகள் பெயர் அளவில் செக்ஸ் செய்து விட்டு, இளைஞர்களை அடித்து விரட்டி விடுவார்கள். பாதிக்கப்பட்ட இளைஞர்கள் நடந்த விசயத்தை வெளியே கூறினால் தனக்கு அவமானம் என நினைத்து வெளியே கூறுவது இல்லை. இது போன்று ஏராளமான இளைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
அரவாணிகள் சம்பாதிக்கும் பணத்தில் போலீஸாருக்கு கப்பம் கட்டுவதால் அவர்களும் கண்டும் காணாமல் விட்டுவிடுகின்றனர்.
மேலும் பல அரவாணிகள் சென்னை மெரினா பீச் வரும் இளைஞர்களிடம் மிரட்டி உருட்டி பணம்,பொருட்களை பிடிங்கி செல்கின்றனர். சென்னையில் லோக்கல் ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளிடம் அரவாணிகள் உரிமையுடன் பணம் வசூல் செய்கின்றனர்.
இது குறித்து சில அரவாணிகளிடம் கேட்டபோது, எங்களை சமூகத்தில்  பெரும்பாலானவர்கள் மதிப்பதில்லை. அவமதிப்பே எங்களுக்கு மிச்சம்.
எங்களுக்கு யாரும் வேலை தருவதில்லை. எந்த வேலையும் எங்களுக்குக் கிடைப்பதில்லை. இப்படி எங்களை எல்லோரும் ஒதுக்குவதால்தான், வேறு வழியே இல்லாமல்தான் விபச்சாரத்தில் வந்து விழுகிறோம்.
நாங்கள் விரும்பி வருவதில்லை. கட்டாயத்தால்தான் விபச்சாரத்தில் குதிக்கிறோம். எல்லோரும் பணத்திற்காக விபச்சாரத்திற்கு வருவார்கள். ஆனால் நாங்கள் வேறு வழியில்லாமல்தான் இதற்கு வருகிறோம்.
தினசரி ரவுடிகளிடம்தான் சிக்குகிறோம். குடிகாரர்களிடம் சிக்குகிறோம். அடிப்பார்கள், காசு தர மாட்டார்கள். வேலை முடிந்ததும் போய் விடுவார்கள்.
தட்டிக் கேட்க முடியாது. போலீஸாரும் எங்களை நிம்மதியாக விடுவதில்லை. தொல்லை கொடுப்பார்கள்.
அதைப் பிடுங்கித் தின்பார்கள். நாங்கள் கஷ்டப்பட்டு உடலை வருத்தி சம்பாதிப்பதில் பெரும் பாதியை போலீஸார் பறித்துக் கொண்டு போய் விடுவார்கள்.
எங்கள் கஷ்டத்தை யாரிடம் போய் கூறுவது என்று தெரியவில்லை. ஆனால் வெளிப்படையாக நாங்கள் கெட்டவர்களாக சித்தரிக்கப்படுகிறோம், என்றனர்.
அரவாணிகள் இது போன்ற செக்ஸ் தொழிலை விட்டு விட்டு சொந்தமாக தொழில் துவங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் விருப்பம்.
தற்போது சமூகத்தில் மூன்றாம் பாலினமாக அங்கீகரிக்கப்பட்டு பல வகைகளிலும் அரசு உதவி வருகிறது. அவர்கள் காவல்துறை போன்ற அரசு பணிகளிலும், இன்ஜினியரிங் போன்ற துறைகளிலும் கால் பதித்து சாதனை படைத்து வருகின்றனர்.
மேலும் ஒரு சில அரவாணிகள் செய்யும் தவறுகளால் ஒட்டு மொத்த அரவாணிகளுக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது. இதை அரவாணிகள் உணர்ந்து தங்கள் சமூகத்திற்கு தீங்கு நேராதவாறு நடந்துகொள்ள வேண்டும் என்று பொதுநல விரும்பிகள் கூறுகின்றனர்

Related Posts:

  • யாகூப் மேமனின் நீதிமன்ற தீர்ப்பை யாகூப் மேமனின் நீதிமன்ற தீர்ப்பை நான் மிக கவனமாக படித்தேன்... அவர் குற்றவாளி என்று தீர்பளிக்க உதவிய சாட்சிகளும் ஆதாரங்களும் மிக பலகீனமானவை நீதி துற… Read More
  • தங்கம் விலை தங்கம் விலை குறைவது மோடியால் அல்ல (சாப்பாட்டு) கல்யாண ராமா......**********************************************************************************தங… Read More
  • மாடித் தோட்டம் அமைக்க வேண்டுமா? உங்கள் வீட்டில் எளிய முறையில் குறைந்த செலவில்🌿 மாடித் தோட்டம் அமைக்க வேண்டுமா?நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்இந்தியாவில் முதன்… Read More
  • முடி உதிர்தல், இளநரை சரியாக.... கரிசலாங்கண்ணி இலையை (200 கிராம்) மையா அரைச்சி, அதோட அரை லிட்டர் தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி பதத்துக்கு வந்ததும் இறக்கி வச்சிரண… Read More
  • ஃபித்ரா கணக்கு நமது ஊரின் TNTJ சார்பான 2015 - க்கான ஃபித்ரா கணக்கு........உங்கள் பார்வைக்காக … Read More