மிஸ்டு கால் மூலம் தொண்டர்களை சேர்த்த பாஜக ஒரு மிஸ்டு கால் கட்சி என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தா.பாண்டியன் விமர்சனம் செய்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தலைமை அலுவலகமான தி.நகர் பாலன் இல்லத்தில், மே தினம் கொண்டாடப்பட்டது. இதில் மூத்த தலைவர் தா.பாண்டியன் கலந்து கொண்டு செங்கொடி ஏற்றி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தனி விமானம் மூலம் கோவை வந்து சிவன் சிலையை திறந்து வைத்த பிரதமர் மோடி, தமிழக விவசாயிகளை கண்டு கொள்ளவில்லை என குற்றம் சாட்டினார். மேலும் பாஜக ஒரு மிஸ்டு கால் கட்சி என விமர்சித்த தா. பாண்டியன், கட்சிக்குள் தேர்தல் நடத்தி தான் பாஜக தனது தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
தமிழிசைக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் காட்டாமாக தா. பாண்டியன் விமர்சித்தார்.