வியாழன், 31 ஆகஸ்ட், 2017

காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பரபரப்பு குற்றச்சாட்டு August 31, 2017

தேர்ந்தெடுக்கப்படாமலே தமிழகத்தை பாஜக ஆட்சி செய்து வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் குற்றச்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் என்ற உத்தரவால் சாதாரண மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று கூறினார்.தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்றும், இந்த அரசு இருக்கும் ஒவ்வொரு நாளும்...

ஆளுநர் அதிகாரத்தில் செய்யப்பட வேண்டிய திருத்தங்கள் - ஆய்வு அலசல்! August 31, 2017

மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான ஆளுநர் அதிகாரம் பல்வேறு காலகட்டத்தில் இந்தியாவில் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. 1967முதல் இந்த சர்ச்சை நீடிக்கிறது. ஆளுநரின் அதிகாரம் குறித்து பல்வேறு ஆய்வு அறிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன.1970ல் தமிழகத்தில் ஆட்சியில் இருந்த திமுக முதல்வர் கருணாநிதி அமைத்த ராஜமன்னார் குழு அளித்த அறிக்கை, 1988ம் ஆண்டு சமர்பிக்கப்பட்ட சர்க்காரியா...

தமிழகத்தில் ஆளுநர் அல்லோகல வரலாறு! August 31, 2017

தமிழகத்தில் நிலவும் குழப்பமான அரசியல் சூழல்களுக்கு மத்தியில் ஆளுநரின் நடவடிக்கைகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இந்த குழப்பம் இப்போது முதல்முறையாக எழுந்த ஆச்சரியம் இல்லை. தமிழக அரசியல் வரலாற்றில் இதற்கு முன்னர் பல முறை ஆளுநர்களாலும், ஆளுநர்களை வைத்தும் சர்ச்சைகள் எழுந்துள்ளது. அவற்றைக் குறித்த எளிய அறிமுகம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.நெருக்கடி நிலை அமலுக்கு வந்து,...

வாய்ப்பாடு

...

பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் சாதித்தது இவ்வளவுதானா? அதிர்ச்சி புள்ளி விவரங்கள்! August 30, 2017

கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி நாட்டில் பணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது முதல் இந்திய பணப்புழக்கத்தில் ஏற்பட்ட மாற்றங்களை புள்ளி விவரங்களுடன் கீழே காணலாம்...* புழக்கத்தில் இருந்து ஒட்டுமொத்தமாக மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட நோட்டு அளவு 86%.* பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட மொத்த ரூபாயின் மதிப்பு 15.8 லட்சம் கோடி.* பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட நோட்டுகளின்...

"கருப்புப் பணத்தை வெள்ளையாக்கவே Demonetisation நடவடிக்கையா?" August 30, 2017

SHARE 1184 VIEWS பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் மத்திய அரசு எதிர்பார்த்தது போன்று பெரிய பலன் ஏதும் ஏற்படவில்லை என்று தெரிய வந்துள்ளது. மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள ஆய்வல் இது வெளிப்பட்டுள்ளது.கடந்த நவம்பர் 8ம் தேதி இரவு திடீரென தொலைக்காட்சிகளில் தோன்றிய பிரதமர் நரேந்திர மோடி, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் நள்ளிரவு முதல் செல்லாது...

பள்ளி சீருடையில் மாதவிடாய் இரத்தம்: வகுப்பு ஆசிரியர் திட்டியதால் மாணவி தற்கொலை! August 30, 2017

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள பள்ளி ஒன்றில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவியை வகுப்பு ஆசிரியர் மற்ற மாணவர்களின் முன்பு திட்டியதால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் 12 வயதான 7ம் வகுப்பு மாணவிக்கு பள்ளியில் இருக்கும்போது மாதவிடாய் ஏற்பட்டு இரத்தம் கசிந்துள்ளது....

யுத்த பூமியான “புத்த பூமி” : 3000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் படுகொலை! August 30, 2017

இலங்கையை போன்று  மற்றுமொரு புத்த பூமி  யுத்த பூமியாக மாறி இருக்கிறது. ஆம்.மியான்மரின் பெரும்பான்மை புத்த மதத்தினருக்கும் சிறுபான்மையினராக இருக்கும் ரோஹிங்கிய முஸ்லீம்களுக்கும் இடையே நடைபெற்ற வன்முறையில் 3,000-க்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாக தொடங்கியுள்ளது...ஏன் வன்முறை வெடித்தது... அதன் பின்னணி வரலாறு என்ன ?மியான்மரின்...

கேரளாவின் குப்பைத் தொட்டியாகும் தமிழகம்! விளக்கமளிக்க ஆட்சியருக்கு உத்தரவு! August 30, 2017

கேரளாவிலிருந்து மின்னணு பொருட்களின் கழிவுகள், மருத்துவ கழிவுகள் கோவையில் கொட்டப்படுவதை எதிர்த்த வழக்கில், கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கோவை மாவட்டம் செட்டிப்பாளையத்தை சேர்ந்த ராமசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், அண்டை மாநிலமான கேரளாவிலிருந்து மருத்துவ,...

பருவநிலை மாற்றத்தால் ‘மம்மி’-களுக்கு ஆபத்து! August 31, 2017

காலநிலை மாற்றத்தால் சிலியில் உள்ள அருங்காட்சியகத்தில் பதப்படுத்தப்பட்டு வரும் மம்மிக்களை பாதுகாக்க வேண்டும் என அந்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உலகிலேயே மிகவும் பழமையான மம்மிக்கள் இந்த அருங்காட்சியகத்தில் தான் உள்ளது எனவும், எனவே, யுனெஸ்கோ அமைப்பின் பாரம்பரிய சின்னம் வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.தற்போது எழுந்துள்ள காலநிலை மாற்றத்தால்,...

புதன், 30 ஆகஸ்ட், 2017

மாநிலத் தலைமையின் முக்கிய அறிவிப்பு

மாநிலத் தலைமையின் முக்கிய அறிவிப்பு( அதிகமாக பகிருங்கள் ) கொள்கைச் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... பீஜேக்கு எதிராக பரப்பப்படும் ஆடியோ குறித்து ஆதாரங்களுடன் அணுகுமாறு பத்து நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. ஜமாஅத் இது குறித்து தக்க முடிவை அறிவித்த பின்னர் அனைத்து கொள்கைச் சகோதரர்களும் அந்தக் கெடு முடியும் வரை அமைதி காத்திருக்க வேண்டும். அல்லது அறிவுப்பூர்வமான வாதங்களை வைப்பதுடன் நிறுத்தி கொண்டிருக்க வேண்டும். நமது அறிவிப்பில் இதை...

அறுவை சிகிச்சையின் போது சண்டையிட்ட மருத்துவர்களால் இறந்து பிறந்த குழந்தை August 30, 2017

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் மகப்பேறு அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்கள் இருவர் சண்டையிட்டனர். உரிய நேரத்தில் அறுவை சிகிச்சை செய்யாத காரணத்தினால் அந்த பெண்ணின் வயிற்றில் இருந்த பச்சிளம் குழந்தை இறந்து பிறந்தது. ஜோத்பூர் அருகே உள்ள Umaid மருத்துவமனையில் நேற்று கர்ப்பிணி பெண் ஒருவருக்கு மகப்பேறு அறுவை சிகிச்சை நடைபெற்றது. பெண் சுயநினைவை இழந்து இருந்த...

சீரழிவுக்கு வழிவகுக்கும் நிதி ஆயோக் அமைப்பை கலைக்க ராமதாஸ் வலியுறுத்தல்! August 30, 2017

சிறப்பாக செயல்படாத அரசு பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என நிதி ஆயோக் அமைப்பு பரிந்துரைத்துள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசுப் பள்ளிகளின் தரம் குறைந்து விட்டது என்பதையோ, அதற்காக நிதி ஆயோக் பட்டியலிட்டுள்ள காரணங்கள் அனைத்தும் சரியானவை என்பதையோ யாரும் மறுக்க முடியாது என கூறியுள்ளார். ஆனால்,...

​​உ.பி-யில் மீண்டும் ஒரு மருத்துவ பயங்கரம் - 48 மணிநேரத்தில் 42 குழந்தைகள் மரணம்! August 30, 2017

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர், பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 48 மணிநேரத்தில் 42 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.கோரக்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒரே வாரத்தில் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்குப்பதிவு...

நடவடிக்கை எடுக்க ஆளுநர் மறுப்பு!

...

பசிபிக் கடலை நோக்கி வடகொரியா ஏவுகணை வீச்சு! August 29, 2017

ஜப்பான் வான் எல்லை வழியாக வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியது முன்னெப்போதும் இல்லாத போர் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஜப்பான் கண்டனம் தெரிவித்துள்ளது. அண்மைக் காலங்களில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக் கொள்கைகளுக்கு முரணமாக அணு ஆயுதங்கள் சோதனையில் வடகொரியா ஈடுபட்டுவருகிறது. இதனால் அந்நாட்டுக்கு எதிராக கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதற்கு எதிர்ப்புத்...

கனவை நனவாக்க 3 தலைமுறைகளாக காத்திருக்கும் வடகொரியா..! August 29, 2017

வடகொரியா வீசிய ஏவுகணை ஒன்று ஜப்பான் நாட்டு வான் எல்லை வழியாகச் சென்று பசிபிக் கடலில் விழுந்துள்ளது. தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுத்தும் வடகொரியாவின் ராணுவ நடவடிக்கையின் பின்னணி என்ன என்பதைப் பற்றி பார்ப்போம்..பல்வேறு அரசியல் கூறுகளாகப் பிரிந்து கிடந்த கொரிய தீபகற்பம், கடந்த 1948ம் ஆண்டு வடக்கு மற்றும் தெற்கு என இரண்டாகப் பிரிந்தது. இக்கால கட்டத்தில் இரண்டு கொரிய...

தொடரும் குழந்தைகள் மரணம்! August 30, 2017

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர், பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 48 மணிநேரத்தில் ஏழு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. கோரக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஜூலை மாதம் ஒரே வாரத்தில் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்குப்பதிவு...

சமூக செயற்பாட்டாளர் பியூஸ் மனுஷ் மீது நித்யானந்தா சீடர்கள் புகார்! August 29, 2017

சமூக வலைதளத்தில் நித்யானந்தாவை தரக்குறைவான வார்த்தைகளால் பதிவிட்டு அவமானப்படுத்திய சமூக செயற்பாட்டளர் பியூஸ் மானுஸ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நித்தியானந்தா சீடர்கள் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.சமூக செயற்பாட்டாளர் பியூஷ் மானுஷ் சமூக ஊடகங்களில் சாமியார் கும்ரீத் ராம் ரஹிம்சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாகவும் நித்தியானந்தா மீதுள்ள  பாலியல் புகார் தொடர்பாகவும் கடந்த 23ம் தேதி பதிவிட்டிருந்தார்.புகைப்படத்தில்...