ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரு குடும்பத்திற்கு 3,800 கோடி ரூபாய் மின் கட்டணம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குஹா என்பவரது வீட்டில் திடிரென மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்ட போது, 3800 கோடி ரூபாய் மின் கட்டணத்தை செலுத்தாததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், 3 அறைகள் கொண்ட தனது வீட்டில் 3 பேன்கள் 3 டியூப் லைட்கள் மட்டுமே உள்ளதாக கூறியுள்ளார்.
இந்த மின் உபகரணங்களை நாள் முழுவதும் உபயோகித்தாலும் இவ்வளவு பெரிய தொகை கட்டணமாக வர வாய்ப்புண்டா என கேள்வி எழுப்பியுள்ள குஹா, இது தொடர்பாக மின்சார வாரியத்தில் அதிகாரபூர்வமாக புகார் அளித்துள்ளார்.