பாபர் Masjid வழக்கில் இஸ்லாமியர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வருமானால், அந்த நிலத்தை, இந்துக்களுக்கு மகிழ்ச்சியுடன் அளிக்க வேண்டும் என, இஸ்லாமிய மத குரு மவுலானா கல்பி சாதிக் தெரிவித்துள்ளார்.
மும்பையில் உலக அமைதி மற்றும் நல்லிணக்க மாநாடு நடைபெற்றது. இதில், திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமா, யோகா குரு பாபா ராம் தேவ், உள்ளிட்ட பல்வேறு மதத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் பேசிய இஸ்லாமிய ஷியா பிரிவு மதகுருவான மவுலானா கல்பி சாதிக், பாபர் Masjid வழக்கில் உச்சநீதிமன்றம் சரியான தீர்ப்பை அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகக் குறிப்பிட்டார்.
இந்த தீர்ப்பு ஹிந்துக்களுக்கு சாதகமானதாக இருந்தால், இஸ்லாமியர்கள் அதனை அமைதியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
அதேநேரத்தில், தீர்ப்பு இஸ்லாமியர்களுக்கு சாதகமாக இருந்தால், அந்த நிலத்தை இஸ்லாமியர்கள் மகிழ்ச்சியுடன் ஹிந்துக்களுக்கு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.