கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை நிரம்பி வருவதால் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழையால், கே.ஆர்.பி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டள்ளது.
இதனால் ஓசூர் அடுத்துள்ள கெலவரப்பள்ளி அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்நிலையில், பெங்களூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்யும் மழையால் கே.ஆர்.பி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
கே.ஆர்.பி அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கும் என்பதால், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய ஐந்து மாவட்ட ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. இதனையடுத்து அணையிலிருந்து கூடுதல் நீர் திறக்கப்படுவதால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.