சனி, 19 ஆகஸ்ட், 2017

கார்ப்பரேட்டுகளிடம் நிதி பெறுவதில் பாஜக முதலிடம்! August 18, 2017

​ கார்ப்பரேட்டுகளிடம் நிதி பெறுவதில் பாஜக முதலிடம்!


ஏ.டி.ஆர் என்கிற ஜனநாயக மாற்றத்திற்கான கூட்டமைப்பு கட்சிகள் பெருநிறுவனங்களிடம் இருந்து பெறும் நிதி குறித்த ஆய்வு ஒன்றைச் செய்துள்ளது. இதில், கடந்த 2012-13, 2015-16 காலகட்டத்தில் கட்சிகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் நிதிகுறித்து ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, இந்தியாவில் மிகப்பெரிய ஐந்து கட்சிகள் வாங்கிய நிதிகுறித்து ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பாஜக சுமார் 2987 பெருநிறுவனங்களிடம் இருந்து சுமார் 705.81 கோடி நிதி பெற்றுள்ளது. காங்கிரஸ் சுமார் 167 கார்ப்பரேட்டுகளிடம் இருந்து 198.16 கோடி நிதி பெற்றுள்ளது. சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 50 பெருநிறுவனங்களிடம் இருந்து 50.73 கோடியும், மார்க்ஸிஸ்ட் கட்சி 1.89 கோடியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 18 லட்சம் ரூபாயும் தலா 17 நிறுவனங்களிடம் இருந்து நிதியாக பெற்றுள்ளது.

இதன்மூலம், இந்த 5 கட்சிகளுக்கு வழங்கப்பட்ட மொத்த நிதியில் சுமார் 73.77% நிதி பாஜகவுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. 

Related Posts: