சனி, 19 ஆகஸ்ட், 2017

வந்தது புதிய 50 ரூபாய் நோட்டு! பழைய 50 ரூபாய் நோட்டு செல்லுமா? August 18, 2017


​வந்தது புதிய 50 ரூபாய் நோட்டு! பழைய 50 ரூபாய் நோட்டு செல்லுமா?


ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா புதிய 50 ரூபாய் நோட்டுக்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நோட்டுக்கள் ‘ப்ளோரசண்ட் ப்ளூ’ நிறத்தில் அச்சடிக்கப்பட்டுள்ளன. இந்த நோட்டுக்களும் இந்திய பணநோட்டு முறைப்படி காந்தி படத்துடன் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பழைய 50 ரூபாய் நோட்டுக்கள் செல்லுமா? அல்லது பழைய நோட்டுக்களை ஒப்படைத்துவிட்டு புதிய நோட்டுக்களாக மாற்றிக்கொள்ள வேண்டுமா? என்ற சந்தேகங்கள் எழுந்தன.

ஆனால், ரிசர்வ் வங்கி தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெளிவாக ஒன்றைத் தெரிவித்துள்ளது. அதன்படி, தற்போதுள்ள 50 ரூபாய் நோட்டுக்கள் செல்லும் என்றும், அவற்றை மாற்ற வேண்டியது இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts: