திங்கள், 21 ஆகஸ்ட், 2017

​உ.பி. ரயில் விபத்து: முக்கிய உயர் அதிகாரி உட்பட 8 பேர் மீது நடவடிக்கை..!! August 21, 2017

​உ.பி. ரயில் விபத்து: முக்கிய உயர் அதிகாரி உட்பட 8 பேர் மீது நடவடிக்கை..!!


உத்தரப்பிரதேசத்தில், உத்கல் விரைவு ரயில் தடம்புரண்ட விபத்து தொடர்பாக முக்கிய உயர் அதிகாரி உட்பட 8 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

வடக்கு ரயில்வே பொது மேலாளர் உட்பட 3 உட்பட விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் அருகே உத்கல் விரைவு ரயிலின் 13 பெட்டிகள் தடம்புரண்டதில் 22 பேர் உயிரிழந்தனர். 

சுமார் 200 பேர் காயமடைந்தனர். இந்த விபத்துக் குறித்து ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

இந்நிலையில், உயர் அதிகாரிகள் உட்பட 8 பேர் மீது ரயில்வே துறை நடவடிக்கை எடுத்துள்ளது. 

ரயில்வே வாரியத்தின் பொறியியல் பிரிவு உறுப்பினர் ஆதித்யகுமார் மிட்டல், வடக்கு ரயில்வே பொது மேலாளர் குல்சி ரேஸ்தா, டெல்லி கோட்ட மேலாளர் ஆர்.என்.சிங் ஆகிய மூவருக்கும் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

மூத்த கோட்ட மேலாளர், உதவிப் பொறியாளர், மூத்த பிரிவு பொறியாளர், இளநிலைப் பொறியாளர் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

வடக்கு ரயில்வேயின் தண்டவாளப் பிரிவு தலைமைப் பொறியாளரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்