தமிழகத்தில் நடைபெற்றுள்ள கிரானைட் ஊழல் முறைகேடுகளைக் குறித்து விசாரிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் நியமிக்கப்பட்டார். பல்வேறு கிரானைட் குவாரிகளில் கடைபிடிக்கப்பட்ட கிரானைட் வெட்டும் தொழில் குறித்து விசாரித்து வரும் சகாயம், தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சகாயத்தின் வழக்கறிஞர் எம்.ராதாகிருஷ்ணன் இதுதொடர்பாக தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வில் இதுகுறித்து முறையிட்டுள்ளார். மேலும், சகாயத்தின் உதவியாளர் சேவற்கொடியனுக்கும் பாதுகாப்பு கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, சகாயத்தின் உதவியாளராக இருந்த பார்த்தசாரதி 2015 ஏப்ரலில் கார் விபத்து ஒன்றில் மரணமடைந்தார். இந்த சாவு குறித்து விரிவான விசாரணை வேண்டும் என்றும் மனு அளிக்கப்பட்டுள்ளது.
மனுக்களை ஆராய்ந்த நீதிபதிகள் பாதுகாப்பு கோரும் மனுக்கள் மீதான விசாரணையை செப்டம்பர் 14ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும், சகாயம் தனது ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க ஆகஸ்ட் 31 வரை காலநீட்டிப்பு செய்துள்ளனர்.