சென்னை ஓ.எம்.ஆர். அருகே ஏரிக்கரையை உடைத்து சாலை அமைக்க முயன்ற பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓ.எம்.ஆர்.சாலை செம்மஞ்சேரி பகுதியில் புது ஏரிக்கரை உள்ளது. ஏரியின் மதகு பகுதியில் தூர் வாருவதாக கூறி, பொதுப்பணித்துறை அதிகாரிகள், பொக்லைன் இயந்திரம் கொண்டு மதகு மற்றும் ஏரிக்கரையை உடைத்து, தனியார் கல்லூரிக்கு பாதை அமைக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறித்த செம்மஞ்சேரி பகுதி மக்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
ஏரியைப் பாதுகாக்க வேண்டிய பொதுப்பணித்துறை அதிகாரிகளே அதனை அழிக்கும் முயற்சியில் ஈடுபடுவது வேதனை தருவதாக அங்கிருந்த பொதுமக்கள் கூறியது குறிப்பிடத்தக்கது.