வியாழன், 10 ஆகஸ்ட், 2017

லடாக் சிகரத்தில் ஏறி தமிழகத்தைச் சேர்ந்த மாணவி சாதனை! August 09, 2017

 லடாக் சிகரத்தில் ஏறி தமிழகத்தைச் சேர்ந்த மாணவி சாதனை!


தமிழகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் லடாக் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார். 

சென்னை வேளச்சேரியை சேர்ந்த மாணவி காவியா. இவர் குருநானக் கல்லூரியில் இளங்கலை மூன்றாமாண்டு படித்து வருகிறார். என்சிசி மாணவியான இவருடன் நாடு முழுவதிலும் இருந்து 18 மாணவிகள், லடாக் சிகரத்தில் ஏற தேர்வு செய்யப்பட்டனர்.

ஹிமாச்சலப் பிரதேசத்தில் ஒரு மாதம் மலையேற்ற பயிற்சி பெற்ற பின்னர், ஜூன் 19-ம் தேதி, பனி படர்ந்த கடுமையான வானிலை கொண்ட லடாக் மலையில் ஏற முயற்சி மேற்கொண்டனர். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 18 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள லடாக் சிகரத்தில் ஏறி 18 மாணவிகளும் சாதனை படைத்தனர்.

மலையேற்ற வீரர்கள் சிலர், பனிச் சரிவில் சிக்கி உயிரிழந்ததை அடுத்து, 2000-மாவது ஆண்டுக்குப் பின் லடாக் சிகரத்துக்கு, யாரையும் அனுமதிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.