வியாழன், 10 ஆகஸ்ட், 2017

​கூகுள் நிறுவனத்தில் பாலின பாகுபாடு காட்டப்படுவதாக புகார் கூறிய பொறியாளர் பதவி நீக்கம்..!! August 09, 2017

​கூகுள் நிறுவனத்தில் பாலின பாகுபாடு காட்டப்படுவதாக புகார் கூறிய பொறியாளர் பதவி நீக்கம்..!!


கூகுள் நிறுவனத்தில் ஆண் - பெண் பாகுபாடு காட்டப்படுவதாக கூறிய அந்நிறுவனத்தின் பொறியாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் கணினி உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட்டில் பொறியாளராக பணிபுரிபவர் ஜேம்ஸ் டோமோர். இவர் கடந்த வாரம் அந்நிறுவனத்தில் நடக்கும் பாலின பாகுபாடு குறித்து அறிக்கை ஒன்றை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார். 

அதில், நிறுவனத்தில் ஆண்-பெண் பாகுபாடு அதிகம் பார்க்கப்படுகிறது என்றும், பெண்களுக்கு தொழில்நுட்பத்துறை மற்றும் தலைமை பொறுப்பு போன்ற பதவிகளை கொடுக்க மறுக்கின்றனர் என எழுதியிருந்தார். 

ஜேம்ஸ் டோமோரின் இந்த அறிக்கை உலகில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நிறுவனத்தின் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக ஜேம்ஸை வேலையை விட்டு நீக்கியது கூகுள். 

இது குறித்து கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை கூறுகையில், ஜேம்ஸ் அனுப்பிய அறிக்கையில் நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு எதிராக மற்றும் பாலின வேறுபாட்டை பற்றி வரம்பு மீறி எழுதியுள்ளார் என்றும், அதனால் அவரை பதவி நீக்கம் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.