புதன், 9 ஆகஸ்ட், 2017

வேலூரில் ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் பெற்ற மாநகராட்சி ஆணையர் கைது..!! August 09, 2017

​வேலூரில் ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் பெற்ற மாநகராட்சி ஆணையர் கைது..!!


வேலுாரில் ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் பெற்ற மாநகராட்சி ஆணையர் கைது செய்யப்பட்டார். 

வேலூர் வேலப்பாடியை சேர்ந்த ஒப்பந்ததாரர் பாலாஜி, கடந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வேலூர் மாநகராட்சி பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிக்காக சுகாதார பணியாளர்களை அனுப்பியுள்ளார். 

இதற்காக அவருக்கு மாநகராட்சி நிர்வாகம் 10 லட்சத்து 23 ஆயிரம் வழங்க வேண்டும் என கூறப்படுகிறது. இந்த தொகையை வழங்க ஆணையர் குமார் 22 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். 

இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸில் பாலாஜி புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து, லஞ்ச பணத்தை பெற்றபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆணையர் குமாரை கைது செய்தனர். மேலும், அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தினர்.

Related Posts: