புதன், 9 ஆகஸ்ட், 2017

லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர் குறித்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்தவர் கடத்தல்..!! August 09, 2017

​லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர் குறித்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்தவர் கடத்தல்..!!


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே லஞ்ச ஒழிப்பு போலிசாரால் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் பற்றி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அம்பேத்கார் என்பவர் மர்ம நபர்களால் கடத்தப்பட்டுள்ளார். 

மங்களம் பேட்டை காவல் நிலையத்தில் காவல்ஆய்வாளராக இருக்கும் தமிழ்மாறன் என்பவர் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கடந்த மாதம் 26-ம் தேதி கைது செய்யப்பட்டார். 

இதனை மக்கள் பட்டாசு வெடித்து மேளதாளத்துடன் கொண்டாடினர். அப்போது தமிழ்மாறனைப் அம்பேத்கார் என்பவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்திருந்தார். 

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அம்பேத்கார் கடையில் உறங்கியபோது அவரை மர்ம நபர்கள் கடத்தி சென்றுள்ளனர்.