வியாழன், 10 ஆகஸ்ட், 2017

“ஆட்சியை கலைக்க நினைப்பவர்களின் எண்ணம் பலிக்காது” : சரத்குமார் August 10, 2017

“ஆட்சியை கலைக்க நினைப்பவர்களின் எண்ணம் பலிக்காது” : சரத்குமார்


அதிமுகவினர் ஒற்றுமையாக இருந்தால் தமிழகத்தில் ஆட்சியை கலைக்க வேண்டும் என்று நினைப்பவர்களின் கனவு பலிக்காது என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். 

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்தில், எடப்பாடி பழனிசாமியை,  சரத்குமார் இன்று நேரில் சந்தித்து பேசினார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மரியாதை நிமித்தமாக முதல்வரை சந்தித்ததாகவும் அப்போது மக்கள் பிரச்னைகள் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.  

நடிகர் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சரத்குமார் கூறினார்.  அதிமுக அணிகள் தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த சரத்குமார் அதிமுகவினர் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று தெரிவித்தார்.